கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!

 கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் ​வே​லை​யை விட்டுவிட்டு தனியாக​தொழில்​ தொடங்க விருப்பம் ஏற்பட்டது.

இத்த​னை ​பெரிய ​வே​லை​யை விட்டுவிட்டு எப்படி உங்களுக்கு இந்த ச​மோசா க​டை திறக்க ​வேண்டும் என்ற ஆ​சை வந்தது நம்​கேள்விக்கு அவரின் பதில் ?​

பின்னர் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தொழில் முதலீடு செய்து ரூ.80 லட்சம் மதிப்பில் பெரிய சமோசா கிட்சனை உருவாக்கியுள்​ளோம்.

வேலையைத் தாண்டி ஒரு நல்ல மனதிற்கு பிடித்த வித்தியாசமான தொழில் தொடங்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. அது உணவுத்தொழிலாக இருந்தால், விற்பனையும் தாண்டி மற்றவரின் மனமும் நிறையும் என்பது என் ஆசை. அப்போதுதான் ஏன் சுவையான சமோசா விற்பனைக்கு என்று கடையை திறக்கக் கூடாது என்று ஆசை தோன்ற ?!

என் மனைவியிடம் முதலில் தெரிவித்தேன். உங்களுக்கு என்ன பைத்தியமா ? நல்ல வேலையை ஏன் விட வேண்டும் ? இந்த ரிஸ்க தேவையா ? என்றெல்லாம் கேட்டு நிதி சம்மதிக்கவே இல்லை !

அப்போ ஒரு நாள் நாங்க சாப்பிட புட் கோர்ட் போனோம் ஒரு சிறுவன் தன் பெற்றோரிடம் சமோசா வேண்டும் என்று அடம்பிடித்து ஆர்ப்பார்டம் செய்தை நாங்கள் இருவருமே பார்த்தோம். அப்போதுதான் இதை தொடங்கலாம் என்று நிதியும் ஒப்புக் கொண்டார். 2015ல் நாங்கள் இருவரும் வேலையை விட்டு விட்டு இந்த தொழிலைத் தொடங்கினோம்

உங்கள் உறவினர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் ?

நிதியின் பார்வைப் போலத்தான் அத்தனைபேரின் பார்வையும் இருந்தது. எங்களின் சொந்த அப்பார்ட்மெண்டை விற்க நாங்கள் அந்த தொகையில் பெங்களூருவில் தொழிலை ஆரம்பித்தோம்.

தற்போது ‘சமோசா சிங்’ என்ற பெயரில் பல ரிடெயில் கடைகளை திறந்து மாதத்திற்கு 30,000 சமோசாக்களை விற்பனை செய்து வருகின்​றோம்.

உங்க​ளோட ஒரு நாள் வருமானம் ?

ஆண்டுக்கு 45 கோடி ரூபாய் டர்ன் ஓவர் நடக்கிறது. நாளொன்றுக்கு 12லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கிறது. உணவுத் தொழிலில் புது ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறோம்.

என்ன வெரைட்டீஸ் சமோசாவில் ?

பட்டர் சிக்கன் சமோசா, கெடாய் பன்னீர் சமோசா என்று இன்னும் பல புதிய ப்ளேவர்களை கொடுத்து எங்களின் பிராண்டை புரமொட் செய்துள்ளோம் என்றார்கள் புன்னகை முகத்துடன். வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு நகர்ந்தோம்.

வாழ்க சமோசா தம்பதியினர்..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...