ஜெயமோகனின்மிகவும் தரம்தரம் தாழ்ந்த விமர்சனம்
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது.
காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள மக்களைப் பற்றி அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து எல்லாம் விமர்சனம் செய்து விட்டார். அது தமிழனுடைய நாகரிகமே கிடையாது.
அது நம்முடைய பண்பாட்டில் கிடையாது. நாம் எல்லோரையும் பாராட்டி தான் பேசியிருக்கிறோமே தவிர, யாரையும் அவ்வளவு இறங்கி விமர்சனம் செய்தது கிடையாது. ஒரு எழுத்தாளர் அப்படி ஒரு விமர்சனத்தை முன் வைத்தார் என்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
இதை நான் அப்போதே சொல்லி இருப்பேன்; ஆனால் அப்போது நான் இதைப் பற்றி பேசி இருந்தால், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகியிருக்கும். அதனால்தான் சூடெல்லாம் அடங்கட்டும் என்று சொல்லி இப்போது பேசுகிறேன். நான் இதை எனக்காக பேசவில்லை.
இதைப் பற்றி யாருமே தமிழ்நாட்டில் கேட்கவில்லையே என்று கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இதை இப்போது பேசுகிறேன்.
நான் பாலக்காடு மாதவன் படத்தை எடுக்கும் பொழுது மக்கள் அதனை மிகவும் வரவேற்றார்கள். சின்ன வீடு திரைப்படத்தில் கேரள பெண்ணின் பின்னால் டாவடித்து செல்வது போல கதாபாத்திரம் அமைத்து இருந்தேன். அதற்கு விமர்சனங்களும் வந்தன. ஆகையால் நீங்கள் படத்தை விமர்சனம் செய்யுங்கள்”
-கே.பாக்யராஜ்
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்