எம்.ஜி.ஆரே பாராட்டிய சிவாஜி படம்!

ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு!.. எம்.ஜி.ஆரே பாராட்டிய சிவாஜி படம்!.. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்!

சிவாஜி நடித்து அதிரி புதிரி ஹிட் அடித்த படம் புதிய பறவை. இந்தப்படத்தோட வெற்றிக்குக் காரணமே அந்தக் காட்சி தான். என்னன்னு பார்க்கலாமா

நடிகர் திலகம் சிவாஜி நடித்த முற்றிலும் மாறுபட்ட படம் புதிய பறவை. 1964ல் வெளியானது. ஜோடியாக நடித்தவர்கள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி. எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சிவாஜியின் தந்தையாக இயக்குனர் தாதா மிராசியே நடித்துள்ளார்.

இந்தப்படம் சேஷ் ஆன்கே என்ற வங்காளப்படத்தின் ரீமேக். இந்தப்படத்தின் இயக்குனர் தாதா மிராசி. இவர் முதலில் இந்தப்படத்தில் சௌகார் ஜானகியை நவநாகரீக பெண்ணின் கேரக்டரில் நடிக்க வைக்கத் தயங்கினார். பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலில் அவரது நடிப்பைப் பார்த்து விட்டு அசந்துவிட்டார் இயக்குனர். இப்படி ஒரு நடிப்பா என அசந்த அவர் படத்தில் அவருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார்.

கிளைமாக்ஸ் காட்சி தான் படத்திற்கே மெருகூட்டியது. அதற்குக் காரணம் வசனகர்த்தா ஆரூர்தாஸ் தான். கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி, சரோஜாதேவி, எம்ஆர்.ராதா, சௌகார் ஜானகி என எல்லோரும் செம மாஸாக ஒரே டேக்கில் நடித்து விட்டனர். அதனால் எல்லோரும் மகிழ்ச்சியோடு டேக் ஓகேன்னு பேக் அப் செய்கிறார் இயக்குனர் தாதா மிராசி.

ஆனால் ஆரூர்தாஸ்சுக்கு மட்டும் மனது உறுத்திக்கொண்டே இருந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் ஒரு வசனத்தை சிவாஜி பேசுவது போல சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாராம். உடனே வெளியே போய்க்கொண்டு இருந்த சிவாஜியை அவசரம் அவசரமாக நிறுத்தினாராம்.

ஒரு போலீஸ் அதிகாரி என்பதையே மறந்து அந்தப் பெண் உங்கள் காலடியில் விழுந்து கதறுகிறாள். ஆனால் நீங்கள் கண்டு கொள்ளாமல் செல்கிறீர்கள். அது அந்தப் பெண்ணோட அழுகையையும் நடிப்பு என்று நீங்கள் எண்ணுவது போலவே இருக்கிறது. அதனால் நீங்கள் அவளை அன்போடு ஏற்பது போல ஒரு வசனம் பேச வேண்டும். பெண்மையே நீ வாழ்க. உள்ளமே உனக்கு என் நன்றி… என்று சொல்ல வேண்டும் என்றார் ஆரூர்தாஸ்

அது மிகவும் சரிதான் என்பதை உணர்ந்து கொண்ட நடிகர் திலகம் மீண்டும் நடிக்க படம் செம மாஸானது. படத்தைப் பார்த்த எம்ஜிஆர் கிளைமாக்ஸ் இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருந்தது என்று பாராட்டினாராம். உடனே அவரது காலில் விழுந்து வணங்கினாராம் ஆரூர்தாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!