தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா
தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை
பகுதி -2
Terminal 21 வணிக வளாகத்தில் “பாரிஸ் அரைவல்” என்று குறிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை உடனே என் மகனுக்கு அனுப்பி வைத்து நான் “பாரிஸ் ஏர்போர்ட் வந்து விட்டேன்.
வந்து என்னை அழைத்துச் செல்” என்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பினேன்.
உடனே மகன் என்னை தொடர்பு கொண்டு “டாடி என்ன சொல்றீங்க நீங்க
நிஜமாகவே பாரிஸ் வந்து விட்டீர்களா “என்று அதிர்ச்சியாக கேட்டார்.
“சரி மேலும் பயமுறுத்த வேண்டாம்” என்று சொல்லி விஷயத்தை சொன்னேன். “பிராங்க் பண்ணுகிறீர்களா. மம்மி தான் இதுபோல் விளையாடுவார்கள். நீங்களும் விளையாடுகிறீர்களே” என்று சொல்லி சிரித்தார்.

பின்னர் லண்டனில் உள்ள என் தங்கை மகள் ஆலிஸ்க்கு” லண்டன் அரைவல்” என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பி “நான் லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட் வந்திருக்கிறேன்.
இங்கே New York connection flight க்கு 16 மணி நேரம் எனக்கு காத்திருப்பு நேரம்.
லண்டனுக்குள் நான் வர இயலுமா அதற்கு வழி ஏதும் உள்ளதா” என்று கேட்டு செய்தி அனுப்பினேன்.
உடனே அவர் என்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு “அப்படியா மாமா அதை பத்தி எனக்கு ஒன்னும் தெரியவில்லையே.
என் கணவர் வெளியில் சென்று இருக்கிறார். அவருக்கு நான் போன் செய்து விசாரிக்கிறேன் “என்று சொல்லிவிட்டு நான் உண்மையை சொல்வதற்குள் என்பதிலை எதிர்பார்க்காமல் தன் கணலரை தொடர்பு கொள்வதற்காக பதட்டத்துடன் என் இணைப்பை துண்டித்து விட்டார்.


நான் உடனே மீண்டும் அவருக்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அதற்குள் அவர் தன் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதால் எனக்கு எங்கேஜ் டோன் வந்துவிட்டது.
ஏனென்றால் ஏற்கனவே ஒருமுறை அமெரிக்கா சென்ற போது British Airways ல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 மண நேர காத்திருப்புக்கு பிறகு New York விமானத்தில் சென்றது அவருக்குத் தெரியும்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் அவரது கணவர் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு “சித்தப்பா ஹீத்ரோ ஏர்போர்ட்டில் இருக்கிறீர்களா.
Transit visa பற்றி எனக்கும் ஒன்றும் தெரியவில்லை.
தற்காலிக ட்ரான்ஸிட் விசா ஏதும் கிடைக்குமா என்பது பற்றி விசாரித்துவிட்டு நான் 10 நிமிடத்தில் மீண்டும் உங்களை அழைக்கிறேன்” என்று சொன்னார்.
நான் உடனே சுதாரித்துக் கொண்டு “இல்லை நான் சும்மா விளையாட்டுக்காக அதை அனுப்பி வைத்தேன்.
நான் தாய்லாந்தில் இருக்கிறேன்” என்று விவரம் சொன்னேன். அவரும் சிரித்துவிட்டு “சும்மா விளையாடுகிறீர்களா” என்று சொல்லி பேசி முடித்தார்.
அதன் பின்பு நினைவுப் பொருளாக எனக்கு ஒரு டீ ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் மட்டும் வாங்கினேன். தங்கை சில fancy பொருட்களை வாங்கினார். விலை மிகவும் அதிகம் தான்.
ஆனால் பல்வேறு புதிய pattern மற்றும் design களில் அழகிய ஆடைகள் இருந்தன.
பிறகு ஓட்டுநர் கூறியவாறு ஒன்றரை மணி நேரத்தில் வெளியே வந்து விட்டோம்.
மீண்டும் 6.30 மணிக்கு எங்களை அழைத்துக் கொண்டு பட்டாயா நகரின் மிக முக்கிய நடன நிகழ்ச்சி ஆகிய அல்காசார் ஷோவுக்கு டிக்கெட் வாங்கிவிட்டு தனக்குத் தெரிந்த நபர் அங்கிருப்பதால் நான் உங்களுக்கு முன் வரிசையில் டிக்கெட் வாங்கினேன் என்று எங்களிடம் கொடுத்துவிட்டு அவர் வெளியில் காத்திருந்தார்.

அரங்கத்தின் முன் புறத்தில் இரண்டாவது வரிசையில் மேடைக்கு மிக அருகில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தோம்.
அன்று மாலை அந்த அழகிய அல்காசர் டான்ஸ் ஷோவை கண்டு களித்தோம்.
(அந்த ஷோவை பற்றிய புகைப்படங்களையும் வீடியோவையும் தாங்கள் கண்டு களிக்க ஏதுவாக இணைத்துள்ளேன்) அந்த நடன நிகழ்ச்சியின் இறுதியில் அதில் நடனமாடிய அத்தனை அழகிய பெண்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது.
அவ்வளவு நளினமாக அவர்கள் நடனம் ஆடினார்கள்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியே வந்தோம். நடனம் ஆடியவர்கள் பலர் அதே costumes உடன் வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். விருப்பம் உடையவர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை.
எனவே வெளியில் வந்தோம். வாகன ஓட்டி எங்களுக்காக காத்திருந்தார். எங்களை அழைத்துக் கொண்டு ஹோட்டலில் விட்டு விட்டு அவர் சென்று விட்டார்.
நாங்கள் இரவு உணவை ஓட்டலில் உட்கொள்ளாமல் ஹோட்டல் ஊழியரின் ஆலோசனையின் படி ஹோட்டலுக்கு அருகில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு சென்று அவர் குறிப்பிட்ட உணவகத்திற்கு சென்று பார்த்தால் முழுமையாக மக்களால் நிரம்பி இருந்தது.
ஒரு பெண்மணி வெளியே வந்து “இங்கே இடமில்லை நீங்கள் போகலாம் “என்று சொல்லிவிட்டார்.
” பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம்” என்று சொன்னோம்.
ஆனால் அவர்” இல்லை இல்லை நீங்கள் போகலாம்” என்று சொல்லி விட்டார்.

அந்த இடத்தில் நிறைய ஓட்டல்கள் இருந்தன. ஆனால் இந்த ஓட்டலில் மிகவும் சுவையாக இருக்கும் என்று தெரிவித்ததால் அந்த ஓட்டலுக்கு சென்றோம்.
அந்த நேரத்தில் நம் சென்னை நகரில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.
மார்ச்சு மாதம் 19ஆம் தேதி என் மனைவியின் 10ம் மாத நினைவு நாளை முன்னிட்டு அவரது கல்லறைக்கு சென்றேன். அந்த கல்லறை இடத்தை வாங்கி எங்களுக்கு அளித்த father Manthovani அவர்கள் 19-05-1967 ல் மறைந்த அவர் அங்கே அடக்கம் செய்யப்பட்டு அவரது கல்லறையின் மீது பலி பீடம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 19ம் தேதி அங்கே திருப்பலி நடத்தப்படுகிறது.
என் மனைவியும் அதே மே 19ம் தேதி காலமானதால் நான் சென்னையில் இருக்கும் நாட்களில் 19 ம் தேதி அங்கு சென்று திருப்பலி வழிபாடுகளில் கலந்துகொண்டு கல்லறையில் நின்று ஜெபித்துவிட்டு வருவேன்.
அன்று வழிபாடு முடிந்து சென்னை அண்ணா சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தோம்.
அப்போது பிற்பகல் 2 மணி நன்றாக பசி எடுத்துக் கொண்டிருந்தது.
சரி மதிய உணவை முடித்துக் கொள்ளலாம் என்று ஓட்டுநரிடம் நல்ல உணவு விடுதியில் நிறுத்துமாறு சொன்னேன். அவர் எல்ஐசிக்கும் டிவிஎஸ் க்கும் இடையில் உள்ள கீதம் என்னும் ஒரு மிகப்பெரிய ஹோட்டலில் நிறுத்தி இங்கு சாப்பாடு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் தரமாகவும் இருக்கும் என்று சொல்லி எங்களை உள்ளே அனுப்பினார்.
காரை பார்க்கிங் செய்துவிட்டு அவரையும் உள்ளே வரும்படி கூறிவிட்டு நாங்கள் உள்ளே செல்லலாம் என்று பார்த்தால் உணவகம் நிரம்பி வழிந்து இடமில்லாமல் வெளியில் சுமார் 40 பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரி என்ன செய்வது என்று அருகில் சென்று பார்த்த பொழுது வாசலில் ஹோட்டலின் பெண் பணியாளர் நின்று கொண்டு “என் பெயரை கேட்டார் எத்தனை பேர்” என்று கேட்டார் ஒரு தாளில் குறித்துக் கொண்டு ஒரு எண் கூறினார். அங்கு இருக்கும் நாற்காலிகளில் அமருமாறு கேட்டுக் கொண்டார்.
அங்கு 50க்கும் மேற்பட்ட நாற்காலிகளை போட்டு ஆங்காங்கே மின்விசிறிங்களையும் போட்டு வைத்திருந்தார்கள்.
சரி வேறு வழியின்றி அங்கு அமர்ந்தோம்.
உணவு உட்கொண்டு வெளியே வருபவர்களை கணக்கில் கொண்டு உள்ளே எத்தனை பேருக்கு இடம் இருக்கிறது என்பதை வாக்கி டாக்கி மூலம் அந்த பெண்மணிக்கு சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு அந்த பெண்மணி வெயிட்டிங் லிஸ்டில் இருக்கக்கூடிய வரிசைப்படி பெயர்களை சொல்லி கூப்பிட்டு உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.
சுமார் 40 நிமிடங்கள் கழித்து எனது பெயரை குறிப்பிட்டு எங்களை அழைத்தார். அதன் பின்பு உள்ளே சென்று உணவு அருந்தினோம்.
நல்ல சுவையான மதிய உணவு அதே வேளையில் தரமாகவும் இருந்தது. மற்ற உணவு விடுதிகளை விட விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும் திருப்தியாக உணவை உட்கொண்டோம்.
ஏன் இந்த தாய்லாந்து ஓட்டலிலும் அதுபோன்ற ஒரு நடைமுறையை செயல்படுத்தக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலை தேர்ந்தெடுத்து அங்கே சென்று தாய்லாந்து உணவுகளை வாங்கி உட்கொண்டோம்.
அதில் Pad Thai sea food என்னும் உணவு மிகவும் சுவையாக இருந்தது.
தாய்லாந்து உணவு வகைகளில் பாட் தாய் என்ற உணவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
Pad Thai chicken, Pad Thai shrimp, Pad Thai fish, Pad Thai pork மற்றும் Pad Thai seafood என பல வகைகளில் கிடைப்பது சிறப்பு. தாய்லாந்தின் signature food இதுதான்.
இதில் Pad Thai seafood எங்கள் மூவரின் favourite உணவு. ஓவ்வொரு நாளும் ஒரு முறையவது இந்த உணவை சாப்பிட்டு இருப்போம்.
இதில் அரிசி நூடுல்ஸ், வேர்க்கடலை, முட்டை, மற்றும் பீன்ஸ் முளைகள் ஆகியவை இருந்தது.
தேங்காய் பால், மிளகாய், எலுமிச்சை, எலுமிச்சை புல், வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து நாம் தேர்ந்தெடுத்த sea food ஐ சேர்த்து நம் கண் எதிரிலேயே fry செய்து சுடச்சுட பரிமாறுகிறார்கள். தேங்காய் பாலும் பீன்ஸ் முளை அல்லது வெங்காய தழை எல்லா வகை உணவிலும் உண்டு.
சர்க்கரையும் சிறிதளவு சேர்க்கிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் சிறிதளவு இனிப்பு சுவை தெரிகிறது.
வெற்றிலை இலைகளுடன் நண்டின் சதையை தேங்காய் பாலில் கலந்து மிளகு போட்டு தயாரித்து அளிக்கும் crab curry சற்று காரமாகவும் வித்தியாசமான சுவையாகவும் இருந்தது. என்ன விலை தான் மிகவும் அதிகம்.
நன்றாக சாப்பிட்டு விட்டு இரவு பத்து முப்பதுக்கு அறைகளுக்கு திரும்பினோம்.
இத்துடன் முதல் நாள் சுற்றுலா திட்டம் முடிவுற்றது.
இரண்டாம் நாள் கோரல் ஐலேண்ட் என்னும் தீவிற்கு எங்களை அழைத்துச் செல்ல இருக்கிறார்கள்.
முதல் நாள் நிகழ்வுகள் மனதிற்கு இனிமையாக நல்லபடியாக அமைந்ததால் இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு பயண களைப்பில் நன்றாக அயர்ந்து தூங்கினோம்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் அடுத்த பகுதியில் தொடரும்
(தொடரும்)
_ அலெக்சாண்டர்

