தமிழ்ப் பற்றாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

 தமிழ்ப் பற்றாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

சர்வதேச அளவில் தமிழரின் பெருமையத் தன் இசையால் கொண்டு சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி பல இந்திய மொழிகளிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து பெயர் பெற்றவர்.

மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் பெற்றார். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். அந்த விழாவில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே..’ என்று தமிழில் பேசி தன் தமிழார்வத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவின் 50வது சுதந்திர தினத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ இசைத் தொகுப்பு இன்றுவரை, ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் தவறாமல் காதுகளில் ஒலிக்கிறது.

இந்நிலையில், தனது 56வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக, தனது டிஜிட்டல் பிளாட்பார்முக்கு கற்றார் எனத் தமிழில் பெயர் வைத்திருப்பது அவரது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கற்றார் என்பது “கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்” 722வது குறளில் வரும் கற்றார் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த டிஜிட்டல் பிளாட்பார்முக்கு சின்னம் திருவள்ளுவர் கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பதாக அமைத்திருக்கிறார்.

மெட்டாவெர்ஸ் எனும் நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம், தான் உருவாக்கி வரும் டிஜிட்டர் பிளார்பார்மான, ‘கற்றார்’ இணையதளத்தின் முகவரியை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதற்கு ஒரு வீடியோவும் வெளியிட்டிருக்கிறார். இந்த மீடியா வழியாக பலரும் தங்கள் படைப்புகளை அதில் பதிவேற்றலாம். இலவசமாக அவர்களின் படைப்புகளை உலகுக்கு எடுத்துச்செல்லும் தளமாக கற்றார் அமையும் எனத் தெரிவித்திருக்கிறார் ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தாய்மொழியான தமிழ் மீது எப்போதுமே தீராக்காதல் உண்டு. ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில்கூட, ‘நான் எனது அம்மாவை மதர் என அழைப்பதில்லை. அம்மா என்று தான் அழைப்பேன்’ என அவர் கூறி இருந்தார். ஒரு சேனலில் நடந்த தமிழ் நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் தொகுப்பாளர் கேள்வி கேட்டதும் அவர் அதைத் தவிர்ப்பதற்காக மேடையிலிருந்து விலகிப்போனார். தமிழில் பேசுங்கள் என்று கூறி தொகுப்பாளரை தலைகுனியவைத்தார். இதேபோல், கடந்தாண்டு தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு பிரச்னை நிலவியபோது, தமிழன்னை ‘ழ’ எனும் வேலை கையில் ஏந்தியபடி இருக்கும் ‘தமிழணங்கு’ எனும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மொழிப்பற்றை நிரூபித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா 2012இல் சிங்கப்பூரில் நடைபெற்றது. மாநிலத்தைச் சேர்ந்த மற்ற நட்சத்திரங்களும் கலந்து கொண்ட இந்த விருது வழங்கும் விழா முழுக்க இந்தியில் நடத்தப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை வழங்க ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இந்தி நடிகை ரேகாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, ​​விருதை அறிவிக்கும்போது ரஹ்மான், “IIFA சிறந்த நடிகர் விருது ரன்பீர் கபூருக்கு” ​​என்று தமிழில் பேசி அரங்கை அதிர வைத்தார்.

அதே மாதிரி இன்னொரு சம்பவம். ஏஆர்ரஹ்தான் எழுதி தயாரித்த திரைப்படம் ’99 சாங்ஸ்.’ இந்தப்படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரித்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ஷங்கர், கௌதம் காவுதேவ மேனன், கேஎஸ்ரவிகுமார், யுவன் சங்கர் ராஜா அனிருத் ஆகியோர் கலந்தகொண்டனர்.

இசைவெளியீட்டின்போது தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஆரம்பத்தில் இந்தியில் பேசினார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த ரஹ்மான் “இந்தி முதலிலயே கேட்டேன். தமிழில் பேசுவ்ரகளா என்று கூறி மேடையைவிட்டு கீழே இறங்கினார். இப்படி ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப் பற்றுக்கு நிறைய நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
கற்றார் (KATRAAR) டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம். இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளைப் பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார்.

பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘கற்றார் என்றால், நன்கு படித்த, அறிவான மக்களின் தொகுப்பு. நிச்சயம் அவர்களால் இந்த உலகத்தை மாற்ற முடியும்’ என தனது டிஜிட்டல் பிளாட்பார்மிற்கு பெயர் வைத்ததற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

பயனர்களும் இந்தத் தளத்தை, தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மற்றும் பிற வகையான டிஜிட்டல் கோப்புகள் போன்ற பொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பயன்படுத்தலாம். – HBAR என்ற அறக்கட்டளையுடன் இணைந்து இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கற்றார் தளமானது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பெருமையைப் பேசும் தளமாக இல்லாமல், இசை உள்ளிட்ட கலைத் துறையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு இலவசமாக சர்வதேச அளவில் அவர்களது திறமையை எடுத்துக்காட்டி, வாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்ப் பற்றும் இசையும் என்றும் வாழ்ந்திருக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...