தனுஷின் ‘நானே வருவேன்’ டீஸர் வெளியீடு
கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான V கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணுவும், வித்தியாசமான கதை களத்திற்குப் பெயர் போன இயக்குநர் செல்வராகவனும் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘நானே வருவேன்’.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான ‘வீரா சூரா’ பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து சாதனையை படைத்துள்ளது.
தனுஷ் திருமண பிரிவுக்குப் பின்னர் முற்றிலும் ஊடகங்களில் வெளிவராமல் இருந்துவிட்டார். இந்த நேரத்தில் அவருக்கு நேரடி ஆங்கிலப் படம் ‘க்ரேமேன்’ வெளியானது. அது அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
தனுஷுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது. திருச்சிற்றம்பலம் படம் தியேட்டரில் வெளியாகி 100 கோடி ரூபாய் வாசூலித்து பாக்ஸ் ஆஃபீசில் இடம்பிடித்தது. அதுவுமில்லாமல் தனுஷ் நடிப்பில் அடுத்து வாத்தி படமும் பெயரிடப்படாத சில படங்களும் வர உள்ளன.
‘நானே வருவேன்’ செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் டீசர், நேற்று (15-9-22) மாலை 7 மணிக்கு தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் ரோகிணி திரையரங்க வளாகத்தில் LED திரையில் பிரத்தியேகமாக காட்சியிடப்பட்டது. அப்போது ரசிகர்களின் ஆரவாரத்துடன் பட்டாசுகள் வெடித்து ஒரு தீபாவளிக் கொண்டாட்டத்துடன் அந்தத் திரையரங்கம் காட்சியளித்தது. இந்தத் திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தின் டீசரில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பது போன்ற காட்சிகள் வருகிறது. ஆரம்பத்தில் தனுஷ் என்ட்ரி ஆகும் சீனுக்கு யுவனின் வழக்கமான பி.ஜி.எம். கலக்குகிறது. இளமையான தோற்றத்தில் முரட்டுத்தனமாக இருக்கும் தனுஷ் அடுத்தடுத்து ஆட்களைக் கொல்கிறார்.
மற்றொரு தனுஷ் வி.ஐ.பி.யில் வரும் தனுஷ் போல் அமைதியாக இருக்கிறார். அவர் பொறியாளர் போல் காட்டப்படுகிறது. முதல் தனுஷுக்கு குழந்தை மனைவி மூவரும் கொல்லப்பட்டது போலும் அவர்களைப் பழி வாங்குவதுபோல் காட்சி உள்ளது.
அவர் தேவதையைக் கண்டேன் பாடல் ஸ்டைலில் ஆடுகிறார். கடைசியில் தனுஷ் கழுத்தை இந்த முரட்டு தனுஷ் நெரிப்பது போல் காட்டுகிறார்கள். இதுவரை தனுஷுக்கு இரட்டை வேடம் என உறுதியாக படக்குழுவோ, செல்வராகவனோ சொல்லவில்லையே என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். எது எப்படியோ படம் வந்தால் தெரியப்போகிறது. சரி, வாரம் பொறுத்திருப்போம்.