தமிழுக்குக் கிடைத்த வரம்
வெ.இறையன்பு – சுயமுன்னேற்றச் சிந்தனையின் அடையாளம். செயலூக்கி, கல்வியின் நிறைகுடம், நிர்வாகத்தின் நேர்மை, ஒழுக்கத்தின் புனிதம். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், செயற்பாட்டாளர். அவர் தன் வாழ் நாளில் சாதித்தவை இன்றைய இளைஞர்களின் பாடப்புத்தகம். அவரின் தற்போதைய ஆட்சிப் பணியின் பயணம் தமிழக வரலாற்றில் மைல்கல். அந்த ஆன்றவிந்த சான்றோன் கடந்துவந்துகொண்டிருக்கும் பாதை மிக நீளமானது. தற்போது அவர் கடந்த வந்த பாதையைச் சற்றே கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
சேலம் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் 1963-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் வெங்கடாசலம் – பேபி சரோஜா இணையருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் இறையன்பு.
இவர் இளங்கலை வேளாண்மைப் படிப்பை முடித்து ஆட்சிப் பணிக்கு வந்த பின்னர் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம், உளவியலில் முதுகலைப் பட்டம், வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம். மேலும் இந்தியில் ‘ப்ரவீண்’ மற்றும் சம்ஸ்கிருதத்தில் ‘கோவிதா’ போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் இளங்கலை (வேளாண்மை) பல்கலைக் கழகத்தில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் இந்திய அளவில் 15வது இடத்தைப் பெற்றார்.
இவர் ஒரு வித்தியாசமான இந்திய ஆட்சிப் பணி நிர்வாகி. உள்ளார்ந்த திறன் களாலும் ஆன்மிக நிலையிலும் நாட்டம் கொண்டவர். இவர் தனது வாழ்வை முழுவதுமாகவே ஒரு தேடலின் பயணமாக மாற்றிக்கொண்டார். பல்லாயிரக் கணக்கான நூல்களைக் கற்றவர். அதேபோல் நூற்றுக்கணக்களான நூல்களை எழுதியிருக்கிறார்.
ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளாக அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். கிராமப்புற ஏழைகளுடன் நெருக்கமாக இணைந்து பணி யாற்றியவர். இவர் நியாயமான நிர்வாகியாகப் பணியாற்றி அரசாங்க இயந் திரத்தை மேம்படுத்துவதுடன், பயனுள்ள நிர்வாகத்தையும் வழங்கி வருகிறார். சில நேரங்களில், மனுதாரர் வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் அவர்களின் குறை கள் களையப்பட்டதுண்டு. ஊழல் தடுப்பு மற்றும் முறைகேடுகளை ஒழிக்கும் விதமாகச் செயல்படுபவர்.
உழவர் சந்தைத் திட்டம், கால்நடை பாதுகாப்புத் திட்டம், மதிய உணவுத் திட்டத் தில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துதல், மாநிலம் முழுவதும் பாலங்கள் மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்களை விரைந்து செயல்பட்டு முடிக்கப் பேருதவி புரிந்தார்.
குறிப்பாக, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள், நாகூர் தர்காவின் கந்தூரி திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என அனைத்து நிகழ்வுகளிலும் எவ் விதச் சிறு அசம்பாவிதமும் நடைபெறாதவண்ணம் நேரடியாகக் களத்தில் இறங்கி இரவு பகலாக வேலை செய்தார்.
கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, கடலூர் மத்திய சிறைச் சாலைக் கைதிகளுக்குத் தொழிற்பயிற்சி அளித்து, அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாதவாறு நிலைமையை மாற்றியமைத்தார்.
தமிழகத்திலேயே முதன்முறையாகப் பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயற்சி கடலூரில் வழங்கப்பட்டது. நரிக்குறவர் சமுதாய மக்களை முன்னேற்றும் வித மாக, அவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் வழங்கல், சொந்தமாக கோழிப் பண்ணை கள் அமைத்தல், தொழிற்கடன் வழங்கல் உள்ளிட்ட முதன்மையான திட்டங் களை அறிமுகப்படுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பட்டுத்தறிக் கூடங்களில் வேலை செய்துவந்த குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து, நிலவொளிப் பள்ளிகளின் மூலம் அவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, சுற்றுலாத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, அண்ணா மேலாண்மை நிலையம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் போன்ற துறைகளில் தலைமைப் பொறுப்புகளில் பணி புரிந்து அந்தந்தத் துறை களில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார் வெ.இறையன்பு.
1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், தஞ்சாவூரில் நடத்தப்பட்ட 8-வது உலகத் தமிழ் மாநாட்டின் தனி அலுவலராக நியமிக்கப் பட்டார். உலகத் தமிழர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு கலை நயத்துடன் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் வெ. இறையன்பு.
இறுதியாக, 2019-ம் ஆண்டு, அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குந ராகப் பணிபுரிந்துவந்தார். அங்கு அந்த நிலையத்தை கல்வித் தரத்தில் முன்னேற்றி பல்லாயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த கல்விப் பணியை ஆற்றினார். அதன் பிறகுதான் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாள ராகச் சீரிய பணியாற்றிவருகிறார்.
சிறு சேமிப்பு வசூலிற்கான சிறந்த ஆட்சியர் விருது, கொடி நாள் வசூலிற்கான விருது இரண்டு முறை பெற்றது.
வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் சிறந்த கவிதைத் தொகுப்பு விருது, ‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது, சிறந்த கட்டுரைகளின் தொகுப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது (ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் மற்றும் ஏழாம் அறிவு ஆகிய நூல்கள் – 1998 மற்றும் 2003), ‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது பெற்றது.
அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப் பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது. வாஷிங்டனில் நடை பெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றிச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை யும் முதல் பரிசைப் பெற்றது
இவர் எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் ரூபாயுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது.
நேர்மையின் அடையாளம் சிறந்த நிர்வாகி, பழக இனிமையானவர், பண்பாளர், படிப்பாளி, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் தூய உள்ளம் படைத்த சிறந்த மனிதர், சாதனை நாயகர் வெ. இறையன்பு, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வரம். அந்த வரம் தமிழுக்குக் கிடைத்த உரம். அதில் செழிக்கட்டும் நல்லிளைஞர்கள் திறன், அதனால் நாடு பெறட்டும் நல்ல வளம்.
1 Comment
நல்ல கட்டுரை…
மிகவும் பெருமையாய் இருக்கிறது.
நான் அறியாத புதிய தகவல்கள் நிறைய கொடுத்த மின் கைத்தடிக்கு நன்றி…