ஆண்களை பாதிக்கும் டெஸ்டோஸ்டெரோன் குறைபாடு

 ஆண்களை பாதிக்கும் டெஸ்டோஸ்டெரோன் குறைபாடு

ஆண்கள் வயதாகும்போது ஏற்படும் மருத்துவக் குறைபாடுகளில் முக்கிய மானது டெஸ்டோஸ்டெரோன்  (Testosterone). இதைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன். இது ஆண்களின் உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. அதில் அவர்களின் விந்தணு உற்பத்தி, தசை அடர்த்தி மற்றும் வலிமை, எலும்புகளின் அடர்த்தி, கொழுப்பு பரிமாற்றம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி போன்றவை குறிப்பிடத் தக்கவை.

எப்போது ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறதோ, அப்போது அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவால் கருத்தரிக்க உதவ முடியாமல் போகும்.

பெண்களைக் காட்டிலும் இது ஆண்களுக்குத்தான் அதிகமாகச் சுரக்கிறது. அத்தகைய உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைய ஆரம்பித் தால், அது உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.  அதிலும் முக்கியமாக ஆண்மை குறையத் தொடங்கிவிடும். ஆகவே இத்தகைய ஹார்மோனின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.

சுமையான வாழ்க்கையா?

தொழில் அல்லது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தம், உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும். மன அழுத்தம் அதீத அளவில் இருக்கும்போது, உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தடுக்கும்.

உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால், இன்சுலின் அளவு அதிகரிக்கும். அதிலும் உபயோகிக்கும் சர்க்கரை அளவைப் பொறுத்து, உடலில் உள்ள டெஸ்டோஸ்டி ரோன் அளவும் தானாகக் குறையும். அதனால் சர்க்கரை உட் கொள்ளுதலில் கட்டுப்பாடு இருப்பது அவசியமாகும். இது முக்கியமாக ஹார்மோன் வளர்ச்சிக் குத் தூண்டுகோலாக இருக்கும்.

டெஸ்டோஸ்டெரோன் உங்கள் உடலில் உள்ள அளவு இயற்கையாகவே உங்க ளுக்கு வயதாகும்போது குறைகிறது. சில சந்தர்ப்பங்களில் அவை அசாதாரண அளவுகளைவிட குறைகின்றன, இது குறைக்கப்பட்ட ஆற்றல், அட்ரீனல் சோர்வு, ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இந்தச் சந்தர்ப்பங்களில் டெஸ்டோஸ்டெரோன் மாற்று சிகிச்சை டெஸ்டோஸ்டெரோன் மருந்தினை சாதாரண நிலைகளுக்கு மீட்டமைக்கப் பயன் படுகிறது. இது ஒட்டுகள், ஊசி அல்லது ஜெல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதற்குப் பல செயல்கள் உள்ளன. குறிப்பாக, அதனை உணவுகள் மூலம் அதிகரிக்கலாம்.  ஆனால் பலருக்கு இந்த ஹார்மோன்கள் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இப்போது அந்த ஹார்மோன்களைச் சரியான அளவில் பராமரிக்க, கீழ் கூறியவைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் உடல் எடையைக் குறைக்க…

அதிக எடையுடன் இருந்தால், பல எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மேலும் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால், அது டெஸ் டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவிடாமல் தடுக்கும். எனவே டெஸ்டோஸ்டி ரோன் அளவை அதிகரிக்க, உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங் கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த கனிமங்கள் நிறைந்துள்ள உணவு களை உட்கொள்ள வேண்டும்.

இது ஆண்களின் உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவி புரியும். டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இருக்கும்போது, இந்தக் கனிமங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், இந்தப் பிரச்சினை பெருமள வில் குறையும்.  குறிப்பாக இந்தச் சத்துக்கள் கடல் சிப்பி, நட்ஸ், பூசணிக்காய் விதைகளில் அதிகம் இருக்கும்.

ஆரோக்கியமான உணவு

சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் பல உடல் பிரச்சினைகளைத் தீர்த்து வைக் கும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள் போன்றவைகளை சீரான முறையில் சாப்பிட வேண்டும். மேலும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்ண வேண்டும்.

ஓய்வு தேவை

தேவையான அளவு ஓய்வும், தூக்கமும் உடலுக்கு மிகவும் அவசியம். இது உட லுக்குத் தேவையான வளர்ச்சி ஹார்மோன் உற்பத்திக்குப் பெரிதும் துணையாக இருக்கும்.

தூக்கத்தில்தான் 70% அளவிலான டெஸ்டோஸ்டிரோன் உடலில் உற்பத்தியா கிறது. எனவே தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக 45-75 நிமிடங்களுக்கு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அது உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் வளர்ச்சியை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் சரியான முறையில் திட்டமிட்டு, அளவான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

மதுபானம் பருகுவதில் கவனம் தேவை

கட்டுப்பாடு இல்லாமல் மதுபானம் பருகுவதால், உடலில் டெஸ்டோஸ் டிரோன் அளவு குறைய ஆரம்பிக்கும். அதிலும் தொடர்ச்சியாக மதுபானம் பருகினால், உட லில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு 50 சதவிகிதம் வரை குறையத் தொடங் கும்.

டெஸ்டோஸ்டெரோன் மருந்தின் சில பக்கவிளைவுகள் :

ஸ்லீப் அப்னியா, கின்கோமாஸ்டியா, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், ஈறு எரிச்சல், இது சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை ஆபத்தான அளவிற்கு அதிகரிக்கும்.  கடுமையான அரிப்பு, திரவம் நிறைந்த கொப் புளங்கள், சிவப்பு, எரிச்சலூட்டப்பட்ட தோல்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படை யாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Endocrinologist ஐ அணுகுவது நல்லது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...