யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய பட பூஜை

 யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய பட பூஜை

சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந் தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு வருபவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு.  இவர் நடிப்பில் தனக்கென தனி அங்கீகாரத்தைப் பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.

இந்தப் படத்தை இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்குகிறார். இதற்கு முன் பாக சசிகுமார்  நடிப்பில் வெளிவந்த ‘ராஜ வம்சம்’ என்னும் திரைப் படத்தை இயக்கியவர்தான் கதிர்வேலு.

பிரபல நடனப் பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ‘ப்ரொடக்ஸன் நம்பர் ஒன்’ என்னும் திரைப்படத்தின் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க கே.வி.கதிர்வேலு எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில்  நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா மற்றும் இயக்குநர் சுராஜ் போன்ற திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்தினைப் படக்குழுவினருக்கு தெரிவித்தனர்.

 

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...