உலக தற்கொலை தடுப்பு தினம் 2022

 உலக தற்கொலை தடுப்பு தினம் 2022

“செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” என்பது 2021 – 2023 உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான முப்பெரும் கருப்பொருளாகும். இந்த தீம் தற்கொலைக்கு மாற்று உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. மற்றும் நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் ஒளியையும் ஊக்குவிப்பதை நோக்க மாகக் கொண்டுள்ளது.

செயலின் மூலம் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், தற்கொலை எண்ணங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அவர்களுக்கு நாம் அக்கறையாக ஆதரவளிக்க விரும்புகிறோம் என்றும் சமிக்ஞை செய்யலாம். நமது செயல்கள் சிறியதாக இருந்தாலும் சரி, பெரிய தாக இருந்தாலும் சரி, கஷ்டப்படுபவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கலாம் என்றும் அறிவுறுத்துகிறது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து இறக்கின்றனர் என்று தெரிகிறது. 15 லிருந்து 29 வயதுடைய இளைஞர்கள் மத்தியில் தற்கொலையே மரணத் துக்கான இரண்டாவது பெரும் காரணமாக உள்ளது. அதுபோல இந்தியா வில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது உலக அளவில் உள்ள நாடுகளில் 8 பேர் தற்கொலை செய்பவராக உள்ளார். அதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பதுதான் வேதனை யானது.

2012ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் தற்கொலை செய்கின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் தற் கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்கவும் தற்கொலைக்கு முயல் வோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தவும் உலக சுகாதார அமைப்பும் தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பும் இணைந்து பணி யாற்றுகின்றன.

அதை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10 அன்று உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD), கடைப்பிடிக்கப்படுகிறது.

இது தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கத்தால் (IASP) ஏற்பாடு செய்யப் பட்டு உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டின் உலக தற்கொலை தடுப்பு தின வாசகம், “செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்”.

இந்த அவசரமான பொது சுகாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை இது பிரதிபலிக்கிறது.

நாம் அனைவரும் – குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், சமூக உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள், சுகாதார வல்லு நர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் – எல்லாம் சேர்ந்து நாட்டில் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்” என்பது இதன் நோக்கங்கள்.

இந்த நாளின் ஒட்டுமொத்த இலக்கு உலகளவில் தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் போன்ற ஆபத்தில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு வீட்டில், பள்ளியில், பணியிடத்தில் மனநலம் குறித்து திறந்த விவாதத்தை எளிதாக்குவதன் மூலம் தற்கொலை தடுப்பை அடைய முடியும்.

தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் தனிநபர்களை மட்டு மல்ல, குடும்பங்கள் மற்றும் சமூகங்களையும் பாதிக்கும் ஒரு அவலநிலை.

உதாரணமாக வேலை அல்லது நிதி இழப்பு, அதிர்ச்சி அல்லது துஷ்பிரயோ கம், மன மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற தற்கொலை தொடர் புடைய ஆபத்துக் காரணிகள் கோவிட்-19 காலத்தில் மேலும் அதிகமாகி யுள்ளது.

இருப்பினும் தற்கொலையைத் தடுக்கலாம். தற்கொலை தடுப்பு நடவடிக் கைகளில் தற்கொலைக்கான தடுப்பு வழிமுறைகளை அணுகி மனநலம் மற்றும் மதுவைக் குறைக்கும் கொள்கை முடிவுகளை எடுத்து தற்கொலை பற்றிய பொறுப்பான ஊடகப் பிரசாரம் மூலம் ஊக்குவித்தல் நல்ல பலனைத் தரும்.

சமூக இழிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை தற்கொலைக் கான உதவியை நாடுவதில் பெரும் தடைகளாக இருக்கின்றன,

ஒரு வருடத்திற்கு 703,000 பேர் உலகம் முழுவதும் தங்கள் உயிரை மாய்த் துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளைக்கும் சுமார் 20 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். மேலும் பலர் தற்கொலை பற்றிய தீவிர எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.

இந்தச் சமூகத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான துக்கத்தை அனுபவிக்கின்றனர். அல்லது தற்கொலை எண்ணத்தால் ஆழமாகப் பாதிக் கப்படுகின்றனர்.

ஒவ்வொரு தற்கொலை மரணமும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தற்கொலைக்கு எதிராக விழிப் புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், தற்கொலையைச் சுற்றியுள்ள களங் கத்தைக் குறைப்பதன் மூலமும், நல்ல எண்ணங்களை ஊக்குவிப்பதன் மூலமும், தற்கொலை அவலங்களைக் குறைக்கலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...