சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதியைப்போல் தமிழுக்கும் ஒதுக்க வழக்கு
“சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது போல், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் செல்வகுமார்.
“டில்லி தேசிய சமஸ்கிருத ஆய்வு, வளர்ச்சி மையத்திற்கு 2017-2020 ஆண்டு வரை ரூ. 643.84 கோடியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உட்பட 15 நாடுகளில் தமிழ், தாய்மொழியாகவும் முதன்மைப் பேச்சு மொழியாக உள்ளது. ஆனால் மத்திய அரசு சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு 2017-2020 ஆண்டு வரைக்கும் ரூ. 22.94 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்தப் பாரபட்ச ஒதுக்கீடு தமிழை மத்திய அரசு புறக்கணிப்பதற்கு உதாரணம்” என்று வழக்கில் தெரிவித் திருக்கிறார் வழக்கறிஞர் செல்வகுமார்.
சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கத் தாக்க லான வழக்கில் மத்திய அரசிடம் விவரம் பெற்று தெரிவிக்க அதன் தரப்பு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி கடம்பூர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
“இந்தியாவில் 14 ஆயிரத்து 435 பேர் சமஸ்கிருதம் பேசுகின்றனர். டில்லி தேசிய சமஸ்கிருத ஆய்வு, வளர்ச்சி மையத்திற்கு 2017-2020 வரை ரூ.643.84 கோடியை மத்திய அரசு வழங்கியது.
தமிழ், இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உட்பட 15 நாடு களில் தமிழ். தாய்மொழியாக மற்றும் முதன்மைப் பேச்சு மொழியாக உள்ளது. சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மத்திய அரசு 2017-2020 வரை ரூ. 22.94 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தமிழை மத்திய அரசு புறக்கணிப்பதற்கு இது ஒரு உதாரணம்.
சமஸ்கிருத வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது போல், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கும் போதிய ஒதுக்க வேண்டும். காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அதை மத்திய பல்கலையாக மாற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு செல்வகுமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் பார்ட்டி இன் பெர்சன் ஆஜராகாததால் இந்த வழக்கு முக்கிய வழக்காக இருப்பதால் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு, வழக்கை எடுத்து மத்திய அரசிடம் விவரம் பெற்று அதன் உதவி தலைமை வழக்கறிஞர் இரண்டு வாரங்களில் விவரம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.