முன்னோருக்கு வழிபாடு செய்யும் மகாளய பட்சம்

இன்று (செப். 10, ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. ஒவ் வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம். இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ் வாறு வாசம் செய்ய பூலோகம் வரும்போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழ மொழி.  நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன் னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது.  நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள். இந்தக் கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். 

தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனில் இருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்பு களை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலம், குருமார்களையும் ரிஷி களையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலம், ரிஷிகடனில் இருந்தும் நிவர்த்தி அடையலாம். பித்ரு லோகத்தில் வசிப்ப வர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மகாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மகாளய ‘பித்ருக்களின் பிரம்மோற்சவம்‘ என்று பட்சம், சிறப்பிக்கப்படு கிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில், மறைந்த திதியில், சிரார்த்தம் செய்வோம். 

அமாவாசை தர்ப்பணத்தைப் பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமா வாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றைவிட புரட் டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளயபட்ச  காலத்தில் பிரதமை தொடங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு இயலவில்லை என்றால், மகாளய அமாவாசை அன்று மட்டுமாவது செய்ய வேண்டும். 

புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து, அவர் களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. இந்த மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் ஏழை மக்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!