சமூக சேவகி சுதா மூர்த்தியின் பண்பும் பணிவும்
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திக்குப் பெரிதாக அறி முகம் ஒன்றும் தேவையில்லை. இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி யின் மனைவி. சுதா தனது பணி வாழ்வை கணினியியலாளராகத் தொடங்கினார். இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவியாக உள்ளார். தவிர பொதுமக்கள் நல்வாழ்வு செயலாக்கத்தில் உறுப்பினராக உள்ளார். மேலும் சுதா பல அனாதை இல்லங்கள், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்குப் பங்களித்துள்ளார். கர்நாடக அரசுப் பள்ளிகளில் மடிக்கணினி வழங்கவும் நூலக வசதிகளை அமைக்கவும் உருவான இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
முதல் பெண் பொறியாளர், கணினி அறிவியல் துறை வல்லுநர், ஆங்கிலம் மற் றும் கன்னட எழுத்தாளர். துறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியவர். அதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.
71 வயதாகும் இவர் எளிமையான தோற்றத்தை விரும்பியவர். இவர் கல்வித் துறைக்கு உகந்த அழகிய பருத்திப் புடவைகள் அணிந்து ஆசிரியராக வலம் வருப வர். எளிமையின் மொத்த உருவமாகவும், பணிவன்பின் இலக்கணமாகவும் இருப் பவர் சுதா நாராயணமூர்த்தி.
21 வருடங்களுக்கு முன்பு புடவை வாங்குவதை நிறுத்திய பெண் இவர் என்றால் நம்ப முடிகிறதா? முற்றிலும் உண்மை.
காசிக்குச் சென்றார், புண்ணிய நீராடினார். அத்தியாவசியப் பொருள்கள் வாங்கு வதைத் தவிர வேறு எந்தச் செலவும் செய்யப்போவதில்லை என்று உறுதி பூண் டார். இனி ஆடை ஆபரணங்கள் புதிய புடவைகள் வாங்கப் போவதில்லை என்று இறைவனின் பெயரால் சத்தியம் செய்தார். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ முடிவுசெய்த, திடநெஞ்சம் கொண்ட இரும்புப் பெண்ணாக மாறினார். இதனால் மன மகிழ்வும் நிம்மதியும் அடைந்ததாகப் பேட்டி அளித்தார். மனதில் உறுதியும் வாக்கில் இனிமையும் கொண்ட புதுமைப்பெண் இவர் என்று கூறலாம்.
இவரது புத்தகங்களும் கட்டுரைகளும் முதியோர் மற்றும் மகளிர் உடல்நலம், பேரிடர் மீட்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தல். ஆதரவற்றோர் நலம் பேணுதல், போரில் கணவனை இழந்த விதவைப் பெண்களின் நலன் பேணுதல், கல்வி உதவி, சுகாதாரம் இவை அனைத்தும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன .
மாநில அளவிலும் தேசிய அளவிலும் சிறந்த பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றார். முக்கியமாக நூலகங்களையும் கணினிகளையும் அரசுப் பள்ளிகளில் கொண்டு சேர்த்தவர். கணினி ஆசிரியராகவும், சமூக சேவகர் ஆகவும் வாழ்ந்து வருபவர்.
தன் எளிமை பற்றிய கணவருடைய கண்ணோட்டத்தைப் பற்றி சொல்கையில், “என் கணவருடைய எளிமைப் பண்புதான் என்னையும் தொற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். அவர், எப்போதும் என் அழகைப் பற்றியும் என் ஆடை களைப் பற்றியும் சிலாகித்துப் பேசியதே இல்லை. ஆனால், எளிமை என்பதில் மட்டும் மிகுந்த நம்பிக்கை உடையவர்.
ஒருவருடைய அழகு என்பது அவருடைய திறமையிலும் நம்பிக்கையிலும் இருக்கிறது. அவருடைய உடைகளில் இல்லை என்பதுதான், சுதா மூர்த்தி இந்த உலகத்துக்குச் சொல்கிற பாடம்.