காடு, மலைகள் சூழ்ந்த மனதுக்கு இதமான  ஷிமோகா சுற்றுலா

 காடு, மலைகள் சூழ்ந்த மனதுக்கு இதமான  ஷிமோகா சுற்றுலா

ஷிமோகாவுக்குச் சுற்றுலா செல்ல கர்நாடகா பேருந்தில் KSRTC  திருச்சி யிலிருந்து பெங்களூரு வரை ஐராவதம் என்கிற ஆறு டயர் உள்ள வாகனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தோம். அந்த வண்டி இரவு 10 மணிக்குக் கிளம்பும். மாலை 6 மணி அளவில் 123 காரைக்குடியி லிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி எட்டரை மணிக்கெல்லாம் திருச்சி அடைந்து 10 மணிக்கு ஐராவட் பேருந்தைப் பிடித்தோம். காலை ஐந்து முப்பது மணி அளவில் பெங்களூருவை அடைந்தோம். 

ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் நாங்கள் பெங்களூரு எஸ்வந்த் பூரில் இருந்து ஷிமோகாவுக்கு ட்ரெயின் டிக்கட் பதிவு செய்திருந்தோம். பெங்களூருவில் இருந்து எஸ்வந்த்பூர் செல்வதற்கு மெட்ரோ ரயிலைத் தேடிச் சென்றோம். கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் பெங்களூரு கன்டோன் மென்ட் பகுதியில் நம்மை இறக்கி விடுகின்றனர்.  அங்கிருந்து மெட்ரோ ரயில் இருக்கும் இடத்திற்குச் சென்ற பொழுது ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல்தான் மெட்ரோ ரயில் சேவை என்று தெரிவித் தார்கள்.  

 பிறகு எங்களுடன் வந்த ஒருவரின் உதவியோடு கன்னட மொழியில் அவர் ஆட்டோவில் பேசி நூற்று எழுபத்தைந்து ரூபாய்க்கு எஸ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷனை சென்றடைந்தோம். எங்களுக்கு உதவி செய்த வர்  கூறும் பொழுதே ஷிமோகா செல்லும் ட்ரெயின் இருக்கும் பிளாட் பாரத்தில் கொண்டுபோய் விடுங்கள் என்று ஆட்டோ டிரைவரிடம் கூறினார். 

ஆனால் ஆட்டோ டிரைவரோ முதல் பிளாட்பார்மில் எங்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டால் நாங்கள் மீண்டும் முதல் பிளாட்பார் மில் இருந்து ஆறாவது பிளாட்பார்முக்கு விசாரித்து நடந்தே சென் றோம். ஆனால் மெட்ரோ ரயிலில் வந்தால் இரண்டு நிமிடங்களில் ஆறாவது பிளாட்பார்ம் எஸ்வன்பூர் ரயில்வே ஸ்டேஷனை அடைய லாம் என்பதை அங்கு சென்ற பிறகுதான் அறிந்துகொண்டோம்.

பிறகு அங்கு ஏ.சி. வெயிட்டிங் ஹாலில் நாங்கள் சிறிது நேரம் ரெப்ரெஷ்  செய்து கொண்டோம். ஒரு நபருக்கு  ரூபாய் 20 ஒரு மணி நேரம். ஒரு நபர் ஒரு சோபாவில் தங்க வேண்டுமானால் ரூபாய் 100. அந்த இடம் மிகவும் சுமாராக இருந்தது. தண்ணீர் பாத்ரூமில்  வரவில்லை

மிகவும் சிரமப்பட்டு நாங்கள் வெளியே வந்து ஐ.ஆர்.சி.டி.சி. கேன்டீனில் உணவைச் சாப்பிட்டோம். காலை உணவு நன்றாகத்தான் இருந்தது. அனைத்தும் செல்ஃப் சர்வீஸ் ஆகும்

பிறகு எட்டரை மணி போல் எங்களது ட்ரெயின் வந்தது. அதில் ஏறி காலை 9.15 மணியளவில் நாங்கள் பயணிக்க ஆரம்பித்தோம். நாங் கள் ஏறிய ட்ரெயினில் VISTADOME  என்கிற பெட்டியில் முன்பதிவு செய் திருந்தோம்.  எக்ஸிக்யூட்டிவ்  ஏ.சி. சேர் கார் என்கிற பகுதியில் எங்க ளது ட்ரெயின் நாங்கள் புக் செய்திருந்தோம். 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சுற்றிலும் கண்ணாடி போன்று இருந்த அந்தப் பெட்டியின் உள்ளே நாங்கள் பயணித்தோம்நார்மல் ட்ரெயின் போலல்லாமல் சுற்றிலும் கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கும். வெளியே செல்லும் அனைத்தையும் நாம் காண இயலும்.  

இந்த ட்ரெயினில் பின்பகுதியில் ஓப்பனாக ஒரு அமைப்பு கொடுக்கப் பட்டிருந்தது. அங்கேயும் நாம்  நின்று இயற்கை அழகை ரசித்து வரலாம்.

பெங்களூருவிலிருந்து ரயில் நிலையத்தில் இருந்து ஷிமோகா செல் லும் வரை சுற்றிலும் அடர்ந்த மலைகளும், காடுகளும் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை ரசித்துக்கொண்டே நாம் செல்லலாம். 

ரயில் தண்டவாளங்கள் பல கிலோமீட்டர்களுக்கு ஒரே நேர் பகுதி யாகச் செல்கின்றது. மலைகளுக்குள் செல்லும்பொழுது நமக்கு மிகுந்த ஆனந்தமாகவும் புதிய அனுபவத்தையும் ஏற்படுத்திக் கொடுக் கின்றது. 

நாங்கள் ரயில் பயணம் ஆரம்பித்து சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து ஷிமோகாவில் இருக்கும் எங்கள் அண்ணன் திரு. அண்ணா மலை தொடர்புகொண்டு, “நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியின் உள்ளே உள்ள சீட்டுகளை 360 டிகிரி ரொடேஷனில் திருப்பலாம். நீங்கள் டி.டி.ஆரிடம் சொல்லி எப்படி திருப்பலாம் என்று கேட்டு கொள்ளு ங்கள்”  என்று கூறினார். அதுவரை எங்கள் ரயில் பெட்டியில் யாருமே அதுபோன்று சீட்டுக்களைத் திருப்பவில்லை. பிறகு நாங்கள் டி.டி.ஆரை அழைத்து அது போன்று திருப்பச் சொன்னோம். 

ஜன்னலையொட்டி  நாம் நன்றாகப் பார்த்துக்கொண்டே வருமாறு அமைப்பு உள்ளது. 4 பேர் சென்றால் 4 பேரும் ஒரே திசையில் உட் கார்ந்து நமது உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், பேசிக் கொண்டு வருவதற்கும் அருமையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய அனுபவம், மறக்கமுடியாதது.

நாங்கள் அதில் இனிமையாக ரசித்துக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம். சுமார் ஒரு மணி நேரம் முன்னதாக எங்களை ஷிமோகாவிற்கு அழைத்துச் சென்றது. 14:30 தான் செல்ல வேண்டும். ஆனால் நாங்கள் 13:30 மணிகெல்லாம் ஷிமோகாவை  அடைந்துவிட் டோம். 

ஷிமோகா உள்ளே நாம் செல்லும்பொழுது முதலில் நம்மை வரவேற் பது தூங்கா ஆறுதான்.  ஷிமோகா உள்ளே செல்லும் பொழுது மிகப் பெரிய ஆறான துங்காவைத் தாண்டிதான் நீங்கள் ஷிமோகா உள் ளேயே செல்ல முடியும். எனவே ட்ரெயினில் சென்றாலும் சரி, பேருந்தில் சென்றாலும் சரி தூங்கா நதியைப் பார்த்து விட்டுத்தான் உள்ளே செல்லலாம். துங்காவும் அதற்கு முன்பு உள்ள பத்ராவும் இணைந்துதான் துங்கபத்திரா என்று மிகப் பெரிய ஆறாக ஓடுவதாகப் பின்பு தகவல்கள் தெரிவித்தார்கள்.

வழியில் தைக்கரே, திப்பூர், அரிசிக்கடை ஆகிய ரயில்வே நிறுத்தங் களில் தட்டு இட்லி  விற்றார்கள். ஒரு தட்டு இட்லி மற்றும்  வடை 30 ரூபாய். தட்டு இட்லி சட்னியுடன் மிக அருமையாக இருந்தது. 

அந்த உணவை ஆளுக்கு ஒரு பிளேட் சாப்பிட்டுவிட்டு மதியம் ஒன் றரை மணிக்கு ஷிமோகாவை அடைந்தோம். ஷிமோகாவில் இருந்து ஆட்டோ எடுத்துக்கொண்டு, ஆட்டோவிற்கு ரூபாய் 70 கொடுத்து ஜுவல் ராக்  என்கிற லாட்ஜை  அடைந்தோம்.

ஜுவல் ராக்  லாட்ஜில் ரூம் வசதி நன்றாக இருந்தது. இரண்டு பேர் தங்கக்கூடிய அந்த ரூமின்  ஒரு நாள் வாடகை ரூபாய் ஆயிரத்தி நானூறு. அடுத்த நாள் 12 மணிக்கு செக் அவுட் செய்துகொள்ளலாம். அங்கேயே உணவு அருந்துவதற்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  

 உணவு அருந்தும் இடத்தில் சவுத் இந்தியன் தாலி சாப்பிட்டோம். சப்பாத்தியும் சாப்பிட்டோம். உணவு நன்றாகத்தான் இருந்தது. மதியம் ஒரு சாப்பாட்டின்  விலை 115 ரூபாய். சாப்பிட்டுவிட்டு நாங்கள் இருக் கும் பொழுது எங்கள் அண்ணன் அண்ணாமலை வந்து சேர்ந்தார்.

அங்கிருந்து எங்களை அழைத்துக்கொண்டு லயன் சஃபாரி இருக்கும் இடத்திற்குச் சென்றார். மதியம் மூன்று முப்பது மணிக்குக் கிளம்பி  சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய லயன் சபாரியை அடைந்தோம்

லயன் சஃபாரி மிகவும் அருமையாக இருந்தது. இரண்டு சிங்கங்கள், இரண்டு புலிகள் என அனைத்தையும் அந்த வாகனத்தின் வழியாகச் சென்று பார்வையிட்டோம். ஒரு நபருக்கு 150 ரூபாய் வசூல் செய்தார் கள். 15 நிமிடம் தான் அந்தப் பயணம் முடிவடைந்துவிட்டது. 

மீண்டும் உயிரியல் பூங்காவுக்குள் செல்வதற்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் வசூல் செய்தார்கள்.  அருமையான இடம்.சுமார் 14 க்கும் மேற் பட்ட சிறுத்தைகளும், புலிகளும், கரடிகளும் உள்ளே அடைக்கப்பட் டிருந்தன . 

நாங்களும் சுற்றுலா செல்லும்பொழுது பல ஊர்களுக்கு, பல காடுகளுக்குள் செல்லும் பொழுது சுமார் 45 நிமிடம், ஒரு மணி நேரம் வாகனத்தில் அழைத்துச் சென்றுவிட்டு  ஒரு மானைக்கூட காண்பிக் காமல் திரும்பி  வந்த அனுபவம் எல்லாம் உள்ளது. ஆனால் இங்கு பத்து நிமிடம் மட்டுமே வாகனத்தில் அழைத்துச் சென்று அனைத்து விலங்குகளையும் காண்பித்தது  மகிழ்வாக இருந்தது.

அவற்றைக் கண்டு ரசித்து குரங்கு, பாம்பு என்று அனைத்து விதமான பறவைகளும் அங்கே நன்றாக வைத்திருந்தனர். உயிரோட்டமாக அவற்றை வைத்திருந்தது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மான் களும் கன்றுக்குட்டி போல் மிக நல்ல போஷாக்காக  இருந்தன. அனைத்துவிதமான மான்களையும் நாங்கள் உள்ளே கண்டுகளித் தோம்.

அங்கிருந்து வான்கோழியைப் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்திருந்த னர். மிகப்பெரிய பார்க்  உள்ளே இருந்தது. அங்கு சிறிது நேரம் நாங்கள் விளையாடிவிட்டு, ஓய்வெடுத்து அதன்பிறகு அங்கிருந்து சிவப்பாக பேலஸ் நோக்கிச் சென்றோம். அது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் எங்களுக்குக் கிடைத்தது. 

மீண்டும் அங்கிருந்து நாங்கள் ஷிமோகாவில் அசோக் கார்டன் ஹோட் டலில் சென்று நல்ல டீ ,காபி சாப்பிட்டோம்.டிஃபனும் சுவையாக இருந் தது.

பிறகு போட்டிங் உள்ள இடத்திற்குச் சென்றோம். போட்டிங்கில்  20 நிமிடத்திற்கு பெடல் போட்டிருக்கும். ஒரு நபருக்கு 100 ரூபாய் . நாங் கள் நான்கு பேர் சென்றிருந்தோம்.

மாலை  ஆறு மணி ஆகிவிட்டதால் ஒரு ரவுண்ட் மட்டும் அழைத்துச் செல்கிறோம் என்று ஒன்றரை ரவுண்டு எங்களை சுமார் 7 நிமிடம் அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். அந்தப் பயணமும் மிகவும் அருமையாக இருந்தது

அங்கிருந்து அருகே உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்றோம். சாய் பாபா கோயில் மிகவும் புதிய வடிவில் இருந்தது. அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு, மலைமேல் இருக்கும் சுப்பிரமணியர் கோயிலுக்குச் சென்றோம். அங்கிருந்து பல்வேறு சாமி தரிசனம் செய்து மீண்டும் அண்ணன் அண்ணாமலை வீட்டுக்குச் சென்று இரவு உணவு சாப்பிட் டோம். 

மீண்டும் அங்கிருந்து இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எங்களது அறையை வந்து அடைந்தோம். மறுநாள் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்தோம். என்னென்ன இடங்களை எல்லாம் பார்த்தோம் என்பதை  அடுத்த பதிவில் காணலாம்

கட்டுரை : லெ .சொக்கலிங்கம், காரைக்குடி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...