டான் – திரை விமர்சனம்
மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, சிறுவயது முதலே அவனைக் கண்டிப்புடன் வளர்க்கிறார். மகனோ தனக்கு பிடித்ததை செய்ய நினைக்கிறான். பள்ளியில் காதல், கல்லூரியில் சேட்டைகள் என வலம் வரும் அவன், இறுதியில் அப்பா விரும்பியதை நிறைவேற்றினானா, அல்லது தனக்கான வழியைக் கண்டுகொண்டு அதில் நடந்தானா என்பது கதை.
பிள்ளைகளுக்காக எந்த சுமையையும் ஏற்கத் துணியும் அப்பாக்கள், ஆசிரியர் களின் மன்னிப்பில் உருப்பெற்று எழும் மாணவர்கள், தன்னைக் கண்டறியும் போது அதில் நம்பிக்கையுடன் உறுதியாக நிற்கும் இளைய தலைமுறை என போலித்தனமில்லாத உணர்வுகளைக் கொட்டி கதாபாத்திரங்களை எழுதி, அழுத்தமான சம்பவங்களை திரைக்கதையில் வைத்து, கச்சிதமாக படத்தை கொடுத்துள்ளனர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.
படத்தில் லாஜிக் முழுதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இது எல்லாம் எந்த universeஇல் நடக்கிறது என்று தெரிந்தால் சொல்லுங்கள்,
ஒரு குறிப்பிட்ட காட்சியில் 12 ம் வகுப்பு மாணவன் தன் மார்க் சீட் பெறுவதற்கு ஆசிரியர் மனோபாலா அழைக்கிறார். இவர் பெஞ்ச் மேல் ஏறி ஒவ்வொரு பெஞ்ச்சாக நடந்து போய் மார்க் சீட்டை வாங்கிட்டு வருகிறார். கேட்டா டான் அப்படித்தான்னு சொல்றாங்க.
படத்தின் முழு நேர காட்சிகளுமே எனக்கு இப்படித்தான் இருந்தது,
சமுத்திரக்கனி பர்னிச்சர் பிசினஸ் பண்ணுவார். மகனுக்குச் செலவு பெருசா பண்ண முடியாத நிலையில் இருப்பார். ஆனால் சிவகார்த்திகேயன் கலர் கலராக ரெயின்போவில் வரும் அத்தனை வண்ணங்களில் வந்துட்டு இருப்பாரு.
கடைசி 30 நிமிடம் மட்டும் நல்லா இருந்தால் படமே நல்லா இருக்கும் என்று எல்லாம் சொல்ல முடியாது
அந்த 30 நிமிடமும் எனக்கு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் இதை விட நன்றாக வொர்க் அவுட் ஆகி இருந்தது. மற்றபடி இந்த மாதிரி காலேஜ், இந்த மாதிரி கதாநாயகன் இதெல்லாம் எங்க நடக்குது அப்படி என்ற எண்ணம்தான் ஓடிக்கிட்டிருந்தது
லாஜிக் மீறுவது தப்பில்ல. ஆனா அது மறந்து போகும் அளவுக்குப் படம் ரசிக்கும்படியாக நம்மை படத்தின் உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும்.
3 இடியட்ஸ் படத்தை தமிழில் விஜய் போன்ற நாயகன் நடிக்கும்போதுகூட படத்தின் தன்மை மாறக்கூடாது என்று சண்டைக்காட்சிகள் எல்லாம் சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இதில் எதுக்கு அந்தச் சண்டைக் காட்சி? சும்மா மாஸ் என்று நாலு பேரு சொல்லவா?
ஒன்று மட்டும் ரொம்ப பிடித்திருந்தது. அது எஸ்.ஜே.சூர்யா நடிப்பு.