விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ பட பூஜை!

 விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ பட பூஜை!

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் ‘எனிமி’ படத் தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் இப்படத் தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.  

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங் களில் சுனில்  வர்மா, நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானு ஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள் கிறார். பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப் பயிற்சிகளை மேற்கொள் கிறார்கள். கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் – ஆதிக் ரவிச்சந்திரன்

தயாரிப்பு – S வினோத்குமார் மினி ஸ்டூடியோ

இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு  – அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு  – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – உமேஷ் ராஜ்குமார் .
சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா
உடைகள் – சத்யா NJ
நடனம்  – தினேஷ், அஸார்
பாடல்கள் – மதுர  கவி, அஸல்  கோலாறு

நிர்வாக தயாரிப்பு – சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

புகைப்படம் – R.S.ராஜா

விளம்பர வடிவமைப்பு – கபிலன்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...