தந்தையர் தின வாழ்த்துகள்*ஒருவிகற்பஇன்னிசை வெண்பா*முந்தைப் பயனால்முருகன்தான் எல்லோர்க்கும்தந்தை வடிவம்தரித்துமே வாழ்கின்றான்சிந்தை நிறைந்தேசிறிதேனும் மாறாமல்எந்தை அவனைஅறி. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள் கூடட்டும் 🙏 கவிஞர் ச.பொன்மணி
Category: கவிதை
தந்தையர் தின வாழ்த்துகள்
வயதாகி போவதின்தடங்களை பிரதிபலிக்கிறதுஅப்பாவின் செய்கைகள். கம்பீர நடை தளர்ந்து நிமிர்ந்த முதுகுகூன் போட்டு, மூக்கு கண்ணாடி அணிந்து, அவரிடம் பேச ஹைடெசிபலில்கத்தினாலும், பழைய நினைவு நாட்களைஅசை போட்டாலும் இத்தனைக்கு பிறகும்பேரன்களின் பள்ளிக் கூடத்திற்கு தான் சேர்த்து வைத்தஓய்வூதிய அன்பினை மட்டும் ஊட்டி…
உன் ஞாபகங்கள்
ஒவ்வொரு நட்சத்திரங்களைப்போல் உன் ஞாபகங்கள் விட்டில் பூச்சியாய் உடல் முழுக்க முழுக்க எரிந்துக்கொண்டிருக்கிறேன்.. நேற்று செய்த ஒரு வானத்திற்கு உன் முத்தங்களின்பிரதியை தந்து மழையை நகலெடுத்தேன் … குளிர்ந்த நிலவின் வாசனையை உன் அருகாமை உணர்த்தியதுப்போல உலர்ந்திருக்கிறேன்.. இறக்கைகள் வெட்டப்பட்டும் கூண்டுக்குள்…
ஒரு பூ பூக்கும்
உன் பார்வை உன் புன்னகை உன் ஸ்பரிசம் உன் முத்தம் உன் பேரன்பு உன் காதல் உன் தாய்மை யாவும் என் இருதயத்தை தூய்மையாக்கும் அப்போது எனக்குள் ஒரு பூ பூக்கும் அதற்கொரு செல்லமாய் பெயர் வைத்தழைத்து மனதுக்குள் புன்னகைத்துக்கொள்வேன்.. நிச்சயம்…
ஆதலினால்காதல்செய்வீர்
பிரபஞ்சத்தை உனதருகில்உணர வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. நிலவின் அழகைஅருகில் அமர்த்தி உரையாற்ற வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. நட்சத்திரங்களை கையில் அள்ளிஉருட்டி விளையாடுதல் வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. உயிர் வாழ்தலின் அர்ப்பணிப்பில்உன்னதம் வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. ஆம்.. ஆதலினால்காதல்செய்வீர்உலகம் புனிதம் பெற… சகுந்தலா…
முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் |
முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் | பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி
பாவேந்தர் பாரதிதாசன்
பிறந்த நாள்! புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்! வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன். · சுப்புரத்தினம்- பெற்றோர்…
விவசாயம்
விவசாயம் வாழும் காலத்தில்விசக்கசாயம் ஆனது விவசாயம்வரும் காலத்தில்வடித்த கஞ்சிக்குவடித்திடுவான் கண்ணீரைகெட்டும் பட்டணம் போனவனும்கிட்டாத கஞ்சிக்காககட்டாயம் கிராமம் வருவான்ஏறுமுகமாக இருந்தவனும்ஏரு பிடிப்பான் சோறுக்காகமுதலாளி முள் வேலியாவான்பணக்காரன் பண்ணைக்காரனாவான்ஆடம்பரம் ஆகும் உரம்பீதாம்பரம் உடுத்தியவனும் -ஒருபருக்கைக்காக படுத்திடுவான்உழைத்து உணவு உண்ணகலப்பை காவல் கடவுளாகநிலத்தை நம்புவான்-அந்தகாலத்திற்காக காத்திருப்போம்
உருகுதலும்பின்பு மறுதலிப்பதும்/-பிரபா அன்பு-
பின்பு மறுதலிப்பதும் இறுதி மடலாய் வரைகிறேன் மீண்டும் ஒரு முறை என் கண்முன் வந்துவிடாதே அன்று என் அழைப்புக்காக காத்திருக்கும் தருணங்கள் மகிழ்வானவை என்றாய் இன்று எனது அழைப்பை நீ துண்டித்துவிடும்போது என் மனம் மௌனமாக அழுவதை உன்னால் உணர்ந்திட முடியாதுதான்…
என் செய்வாய் மானிடா? | ஸ்ரீநிரா
வெறுமை சூழ இருக்கிறது முழு உலகம் எது செய்தாலும் உரைக்கவில்லை வார்த்தைகள் பிரிந்து எழுத்துக்களாகி தாள்களை விட்டு வெளியேறுகின்றன இசைக் கலைஞன் அபஸ்வரமாக ஒலிக்கிறான் பேனாவிலிருந்து உயிரில்லாத பொய்யெழுத்துகள் வெளி வருகின்றன வறண்டு போன நாக்கும் பிளவுபட்ட உதடுகளும் ஒத்துழைக்க மறுக்கின்றன…
