சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல் ******
எழுசீர் விருத்தம் ******
மா விளம் மா காய் மா மா காய்
****** 1. பெற்ற சுதந்திரம்
பேணிக் காக்கவே
பிறவிப் பிரிவைப்
போக்குங்கள்
உற்ற நலமதை
உண்மை யாக்கியே
உலகம் போற்ற
ஓங்குங்கள்
கற்ற கலைமிகக்
காலம் மாறினும்
கருத்தைச் சொல்லிக்
கவருங்கள்
மற்ற மடிகளை
மனத்தி லேற்றாமல்
மனிதம் மதிக்க
*வாழ்வீரே*!
2. சொத்துச் சுகங்களை
ச் சூது களின்றிச்
சுகிப்புச் செய்யக்
கூடுங்கள்
அத்து மறப்பவர்
ஆக மென்றுமே அதம மென்றே
கூறுங்கள்
எத்து வழிபல
இச்சை மீறவே
இடற வைக்கும்
போதிலும்
ஒத்துக் களிப்புடன்
ஒன்றிப் போகாத
உலகம் படைத்தே
வாழ்வீரே!
3. அச்சம் விடுபட
அன்பில் வாழவே
அகந்தை விட்டே
ஆளுங்கள்
உச்சம் உயர்வுற
உண்மை சொல்வதா
ல் ஒழுக்க மோங்கும்
மாறுங்கள்
மிச்சம் வருவதை
மீண்டும் மீண்டுமே
மிடிமை மாற்றும்
வழியிலே
ஒச்சம்
விடுபட உலகின்
நன்மைக்கே
ஒருத்துக் கொண்டே
வாழ்வீரே!
4. மக்க ளறிவினை
மலர வைக்கவே
மார்க்கம் காண
முயலுங்கள்
உக்க லெனவரும்
உலர்த லேற்காமல்
ஊக்கம் கொண்டே
உயருங்கள்
எக்க லுரைப்பவர்
எடுப்புச் செய்கின்ற
ஏய்ப்பை வெல்ல
இடறுங்கள்
ஒக்க ல் விரும்பிடும்
உணர்வை ஏற்கவே
ஒருமைப் பட்டே
வாழ்வீரே!
5. பாதை தெளிகிற
பண்பை ஏற்றுமே
பார தத்தைப்
போற்றுங்கள்
வாதை வடிகிற
வாழ்வும் மாறவே
வாகை சூடி
வளருங்கள்
சூதைத் தவிர்த்திடச்
சோம்பல் விட்டுமே
சூட்சு மத்தால்
வெல்லுங்கள்
தாதை வழியெனத்
தரணி மீதிலே
தழைத்தே தகையாய்
வாழ்வீரே! ******
மடி..சோம்பல்/கேடு சுகிப்பு.
….இன்ப அனுபவம்
அத்து…எல்லை
ஆகம்…..மனம்
அதமம்…..இழிவு
எத்து…..வஞ்சகம்
உச்சம்…..
சிறப்பு மிடிமை..
…. வறுமை ஒச்சம்..
…குறைவு ஒருத்து…
..மன ஒருமைப்பாடு
உக்கல்… உளுத்தது
எக்கல்..
..பலர் முன்
சொல்லத் தகாத
சொல் எடுப்பு.
…தொடங்கும் காரியம்
ஏய்ப்பு…..
வஞ்சகம்
ஒக்கல்…
..சுற்றம் வாதை
.. துன்பம் ****** ..
… முனைவர் பொன்மணி சடகோபன்
பாடல், இசை, குரல் &ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்