ஹைதராபாத் “உரத்தசிந்தனை” கிளையின் 16-ஆவது ஆண்டு விழா..!

 ஹைதராபாத் “உரத்தசிந்தனை” கிளையின் 16-ஆவது ஆண்டு விழா..!

தெலுங்கானா அரசின் மொழியியல் மற்றும் கலாச்சாரத்துறையின் ஆதரவுடன் உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நம் உரத்தசிந்தனை 23-ஆவது ஆண்டு விழா, ஹைதராபாத் உரத்தசிந்தனை கிளையின் 16-ஆவது ஆண்டுவிழா ஹைதராபாத்தில் உள்ள இரவீந்திர பாரதி  சிற்றரங்கத்தில் 14-07-2024 நடைபெற்றது.

ஹைதராபாத் உரத்தசிந்தனை சங்கக்  கிளையின் செயலாளர் விஞ்ஞானி திரு.சு. ராஜு  வரவேற்புரை நிகழ்த்தினார்.

Cancer நோயாளிகளுக்கு இறுதிநேர சேவை புரியும் SPARSH HOSPICE  நிறுவனத்தை நிறுவி  சமூகசேவை செய்துவரும்  மருத்துவர் பத்மஸ்ரீ Dr.திரு. M.சுப்பிரமணியம்  அவர்களுக்கு Global welfare foundation நிறுவனர் திரு.லிங்கம் ஸ்ரீநிவாசன் சேவாரத்தினம் விருது வழங்கினார்.

பாடலரங்கம் , குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் ,ஓவியர் பிருத்வி ராஜ்   4 நிமிடங்களில்ஓவியம்  தீட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 திரு.எஸ்.வி.ராஜசேகர் தலைமையில்

நம் உரத்தசிந்தனை ஹைதராபாத் சிறப்பிதழை   எழுத்தாளர்

திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட திரு P.தர்மசீலன் , திரு. T.S. சத்தியவதன், பேராசிரியர் திரு. பட்டாபிராமன், முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரதிகளைப் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்துச் சுடர்  விருது பெற்ற Dr.நடராஜன் K.கணபதி எழுதிய சிந்தனைத்துளிகளின் முதற்பிரதியை திரு.சாய்காந்த் பெற்றுக்கொண்டார். உரத்தசிந்தனை இணைச்செயலாளர்  திரு,G.சுப்பிரமணியன் மதிப்புரை வழங்கினார்

கவிச் சுடர் விருது பெற்ற கலாநேசன் சரவணன் எழுதிய “மணப்பெண் “ கவிதை நூலை திருமதி. மனோன்மணி வரதராஜன் முதற்பிரதி பெற்று மதிப்புரை  வழங்கினார்.

நாவல் திலகம்  பட்டம்பெற்ற திருமதி. மைதிலி சம்பத் எழுதிய “வண்ணத்தேரில் வசந்தம்” என்ற நாவலின் முதல் பிரதியை உரத்தசிந்தனை தலைவர் திருமதி. பத்மினி பட்டாபிராமன் பெற்று மதிப்புரை  சிறப்பாக வழங்கினார்.

“எண் ” எண்ணம் என்ற கவியரங்கில்  9 கவிஞர்கள் பங்கேற்றனர். திருமதி. சாரதா சந்தோஷ்  கவியரங்கத்தை நெறிப்படுத்தி நடத்தினார்.

எந்த உறவு இனிமையானது என்ற தலைப்பில் உரத்த சிந்தனை பெங்களூரு கிளைத் தலைவர் துளசி பட்  பேச்சரங்கத்தை நெறிப்படுத்தி நடத்தினார்.

திரு.பட்டுக்கோட்டை பிரபாகர்   எந்த வயதிலும் கற்பதை நிறுத்தக்கூடாது என்பதை வற்புறுத்தினார்.

ஹைதராபாத் உரத்தசிந்தனை கிளையின் தலைவர் திருமதி. அருண்மதி இராமதிலகம் , உரத்தசிந்தனையின் பொதுச் செயலாளர் திரு.உதயம்ராம் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தித் தொகுப்பு  –  G சுப்பிரமணியன் 

காணொளித் தொகுப்பு – மு.மனோன்மணி

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...