“யாதுமானது காதல்” – பூவேந்தன் சிதம்பரம்
எல்லை மீறாத தொல்லை நீ
இல்லை… என சொல்லாத வள்ளல் நீ
மீட்க முடியாத கடனும் நீ
வாழ்நாள் முழுக்க கட்டும் அசல் நீ
கொக்கி போடாத தூண்டில் மீன் நீ
சொக்கவைக்கும் மண் மணம் நீ
அகல் விளக்கானதும் நீ
விலக்கினால் அகலாததும் நீ
குளிர் காலத்தின் வெப்பம் நீ
தனலின் தாகம் தணிக்கும் புனல் நீ
ஊடல் பொழுதின் குறை நேரம் நீ
கூடல் பொழுதின் நிறை நேர தீயும் நீ
நான் என்னவென்று ஆனாலும் அது நீ
எப்போதும் என்னை வென்று ஆள்வது நீ..நீ..நீயே..!!
தீ..தீ..தீயே!!