Tags :கைத்தடி முசல்குட்டி

அண்மை செய்திகள்

சீனாவில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்..!!

   பெய்ஜிங்: சீனாவையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 400 கைதிகளுக்கும் பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   ரென்சாங் சிறையில் இருக்கும் 200 சிறைக் கைதிகளுக்கும், 7 காவலர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஷான்டாங் மாகாண சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.   நாங்கள் எடுத்த முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு திட்டங்கள் பெரிதாக பலனளிக்கவில்லை. சிறைக் கைதிகள் பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது […]Read More

பாப்கார்ன்

இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது…!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜனைக் காவல்துறை கைது செய்துள்ளது:     லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது.    புதன்கிழமை இரவு அந்தத் திரைப்படத்துக்கான காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அங்கு உயரமான […]Read More

நகரில் இன்று

பிகார் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை..!

பிகாரில் தனியார் வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது:    பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நான்கு பேர் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரையா பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அடையாளம் தெரியாத நால்வர் […]Read More

பாப்கார்ன்

சென்னையில் 15 இடங்களில் வருகிறது புதிய மேம்பாலங்கள்: எங்கெங்கு தெரியுமா?

சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.     ரூ.1,500 கோடிச் செலவில், சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் 15 இடங்களில் புதிய மேம்பாலங்களைக் கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் சென்னை மாநகராட்சி பரிந்துரையை முன்வைத்துள்ளது.     தற்போது திமுக தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போதுதான், சென்னையின் பல்வேறு இடங்களில் சென்னை மாநகராட்சி தரப்பில் […]Read More

நகரில் இன்று

பைக் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை..!!

   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பைக் தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தயாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.    திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் அபி (18) என்பவரை அதே பகுதியை சேர்ந்த குமார், தயாளன் ஆகிய இருவரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமையில்  குடி போதையில் பைக் ஓட்டி வந்த தகராறில் அபியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.   இந்த நிலையில் தயாளன் […]Read More

அண்மை செய்திகள்

அனாதை குழந்தைகள் காப்பக தீ விபத்தில் 15 குழந்தைகள் பலி!

    மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோ நாட்டில் உள்ள அனாதை குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.    ஹைடியன் தலைநகர் போர்ட் -ஓ- பிரின்ஸ் மாகாணத்தின் தென்கிழக்கில் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 2 தளங்கள் கொண்ட அனாதை குழந்தைகள் காப்பகத்தில் 66 குழந்தைகள் இருந்து வந்துள்ளனர்.     இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் வியாழக்கிழமை […]Read More

பாப்கார்ன்

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்!

   “Happy Valentine’s Day “2020: அன்பை வெளிப்படுத்தி உலகை ஆளும் வல்லமை இந்த காதலுக்கு உண்டு!     பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம். உங்கள் மனதுக்கு பிடித்தவருக்கு இந்த வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மனதில் இடம்பிடிங்க. உங்களின் அன்பு இந்த உலகை ஆளட்டும். அனைவருக்கும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் காதலர் தின நல்வாழ்த்துகள்!Read More

பாப்கார்ன்

கீழடியில் அருங்காட்சியகம்:

 தமிழக மக்களால் கொண்டாடப்படும் அறிவிப்பு…    சென்னை: 2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.    கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு மறந்த நிலையில், தமிழக அரசு அதனை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.   தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறும் கீழடியில், புதிய அருங்காட்சியகத்தை தமிழக அரசே அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    கீழடியில் கிடைத்த அரிய பொருட்களை பாதுகாக்கும் அருங்காட்சியகம் […]Read More

கைத்தடி குட்டு

வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் 700 கிலோ கஞ்சா பறிமுதல்:

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திச் சென்ற 700 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.  ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை கடைவீதியில் சென்ற அசோக் லைலாண்ட் கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது காரில் 350 பார்சல்களாக இருந்த 700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.     இது தொடர்பாக வேதாரண்யம் செல்வராஜ் (54), கோடியக்காடு அய்யப்பன் (33),பரமானந்தம் (35), சென்னையைச் சேர்ந்த ரமணன் (45), தவமணி (37) ஆகிய 5 பேரை […]Read More

பாப்கார்ன்

ஏழு மாநிலங்களில் பேஸ்புக் நடத்தும் டிஜிட்டல் கல்வியறிவு திட்டம்….

டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை இந்தியாவின் ஏழு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.     கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் டிஜிட்டல் கல்வியறிவு குறித்த தனது ‘வீ திங்க்’ என்ற திட்டத்தை தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) மற்றும் சைபர் அமைதி அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின்படி, இந்தயாவில் ஏழு மாநிலங்களில் டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.    உத்தரப்பிரதேசத்தில் இருந்து தொடங்கி, அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட் […]Read More