அனாதை குழந்தைகள் காப்பக தீ விபத்தில் 15 குழந்தைகள் பலி!
மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோ நாட்டில் உள்ள அனாதை குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஹைடியன் தலைநகர் போர்ட் -ஓ- பிரின்ஸ் மாகாணத்தின் தென்கிழக்கில் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 2 தளங்கள் கொண்ட அனாதை குழந்தைகள் காப்பகத்தில் 66 குழந்தைகள் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியது. படுக்கையறை மற்றும் பிற அறைகளை சூழந்துகொண்ட புகையால் உறக்கத்தில் இருந்த குழந்தைகளால் வெளியேற முடியாமல் காப்பக கட்டிடத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரண்டு குழந்தைகள் படுக்கையறையிலேயே முற்றிலுமாக எரிந்த நிலையில் கிடந்தனர். மீட்கப்பட்ட 13 குழந்தைகள் பலத்த தீ காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் சுவாச பிரச்னையால் உயிரிழந்தனர்.