திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி

பாரம்பரிய அழகிப் போட்டிகளைத் தாண்டி பெண்களின் சாதனை

வால்ட் டிஸ்னியின் வார்த்தைகளில், “நம் கனவுகள் அனைத்தும் நனவாகும் அவைகளை தொடர நமக்கு தைரியம் இருந்தால்”

05-05-2024 அன்று லண்டன் (UK) நகரில் AGLP நிறுவனம் நடத்திய செல்வி/திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்
பெண்மணி சித்ரா ரோஷினி பட்டத்தை வென்றார்.

பாரம்பரியமாக, அழகுப் போட்டிகள் குறுகிய வரையறையுடன் தொடர்புடையவை. ஆனால், AGLP நிறுவனம் ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் மற்றும் பிறர் வாழ்க்கையை மாற்றும் குணங்கள் இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். ஒரே மாதிரியான கொள்கைகளை மீறி, அவர்களின் தனித்துவத்தைத் தழுவும் பெண்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் தான் இந்த திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் பட்டம்.

இந்த திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024ன் பட்டம். திருமதி சித்ரா ரோஷினி’ன் அவர்களின் வெற்றி தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல. ஒவ்வொரு பெண்மணியும் தங்களது பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், எப்படி ஒரு வாய்ப்புக்கு தகுதியானவராக தங்களை மாற்றி கொள்ள முடியும் என்பதை உணர்த்தும்

பெங்களூர் நகரில் பிறந்து வளர்ந்த சித்ராவின் வெற்றிப் பாதை நிறைய துன்பங்களை கொண்டது . இளம் வயதிலேயே டிஸ்லெக்ஸியா இருப்பது கண்டறியப்பட்டது மேலும் கல்லூரி நாட்களில் காசநோயால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

நரம்பு மற்றும் கழுத்து பிரச்சனைகள் தொடர்ச்சியாக இருந்தும் விடாமுயற்சியுடன் சமாளித்துக் கொண்டு இவர் அவரது கணவர் ஸ்ரீதர் மற்றும் இரண்டு அழகான குழந்தைகளுடன் வாழ்கிறார். இவரது கணவரும் குழந்தைகளும் இவரை மிகவும் அன்புடன் கவனித்து கொள்கின்றனர்
`

குறைபாடுகள் ஒருவரின் திறன்களை வரையறுக்காது. திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 பட்டம் சித்ராவின் வெற்றி இதே போன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்றவர்களுக்கும் மேலும் ` உலகத்தில் எல்லா இடங்களிலும் வசிக்கும் பெண்களுக்கு உத்வேகம் அளித்து, அவர்களால் சாதிக்க முடியும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.

சித்ரா ரோஷினி அவர்களின் இந்தப்பயணம் பின்தங்கிய நாடுகளில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கபட்ட மற்றும் மனநலம் குன்றியக் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் சிறப்பு கல்வி விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

, “நம் கனவுகள் அனைத்தும் நனவாகும் அவைகளை தொடர நமக்கு தைரியம் இருந்தால்” இந்த வால்ட் டிஸ்னியின் வார்த்தைகள் உண்மைதானே!

-ஸ்ரீதர் பழனிச்சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!