கீழடியில் அருங்காட்சியகம்:

 கீழடியில் அருங்காட்சியகம்:

 தமிழக மக்களால் கொண்டாடப்படும் அறிவிப்பு…

   சென்னை: 2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

   கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு மறந்த நிலையில், தமிழக அரசு அதனை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

  தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறும் கீழடியில், புதிய அருங்காட்சியகத்தை தமிழக அரசே அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

   கீழடியில் கிடைத்த அரிய பொருட்களை பாதுகாக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

  மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போது, கீழடியை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாகக் கூறப்பட்டது. இந்த வாய்ப்பை தமிழக அரசு மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு, கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...