ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும்..
எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்…..!
சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும், தமிழகத்தில் எந்தப் பகுதியில் இருக்கும் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதாவது,
நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு வழங்கிய ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும், எந்தப் பகுதியிலும் இருக்கும் ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடிபெயர்ந்து செல்லும் மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.