வரலாற்றில் இன்று ( 11.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 11 கிரிகோரியன் ஆண்டின் 131 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 132 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது.
868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும்.
912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார்.
1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார்.
1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை அமெரிக்கக் கண்டம் நோக்கி ஆரம்பித்தார்.
1672 – பிரான்சின் பதினான்காம் லூயி இடச்சுக் குடியரசை முற்றுகையிட்டான்.
1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலோ-இடச்சு-அனோவர் படைகளைத் தோற்கடித்தன.
1812 – இலண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் ஜோன் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1833 – பிரித்தானியாவின் லேடி ஒஃப் த லேக் பயணிகள் படகு நியூபவுண்ட்லாந்து தீவுக் கரையில் பனிமலை ஒன்றின் மீது மோதி மூழ்கியதில் 265 பேர் உயிரிழந்தனர்.
1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்க அரசுத் தலைவர் ஜேம்ஸ் போக் மெக்சிக்கோ மீது போரை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மே13 இல் போருக்கு அனுமதி கிடைத்தது.
1857 – சிப்பாய்க் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் தில்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1858 – மினசோட்டா அமெரிக்காவின் 32வது மாநிலமாக அனுமதிக்கப்பட்டது.
1891 – சப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த உருசிய இளவரசர் நிக்கொலாசு சப்பானியக் காவல்துறையினனின் வாள் வீச்சில் இருந்து தப்பினார். இவர் கிரேக்க, டென்மார்க் இளவரசர்களினால் காப்பாற்றப்பட்டார்.
1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1924 – மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றின.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒக்கினாவா கரையில் அமெரிக்க வானூர்தித் தாங்கிக் கப்பல் மீது சப்பானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 346 பேர் கொல்லப்பட்டனர்.
1949 – சியாம் நாடு தாய்லாந்து என இரண்டாவது தடவையாகப் பெயர் மாற்றம் பெற்றது.
1953 – டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1972 – ஐக்கிய அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நெவாடாவில் நடத்தியது.
1985 – இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் உயிரிழந்தனர்.
1995 – 170 நாடுகள் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
1996 – எவரெசுட்டு சிகரத்தில் இடம்பெற்ற பனிப்புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
1996 – மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் தீப்பிடித்து வீழ்ந்ததில் அனைத்து 110 பயணிகளும் உயிரிழந்தனர்.
1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.
2011 – எசுப்பானியாவில் லோர்க்கா என்ற நகரில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
2013 – துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கின்சாசா நகரில் காற்பந்து விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1669 – ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர் (இ. 1735)
1824 – ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பி (இ. 1904)
1875 – ஹரியெட் குயிம்பி, அமெரிக்க விமான ஓட்டி, எழுத்தாளர் (இ. 1912)
1881 – தியோடர் வான் கார்மன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1963)
1897 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், கவியோகி (இ. 1990)
1897 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)
1904 – சால்வதோர் தாலீ, எசுப்பானிய ஓவியர் (இ. 1989)
1909 – எல்லிஸ் ஆர். டங்கன், அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2001)
1912 – சாதத் ஹசன் மண்ட்டோ, இந்திய-பாக்கித்தானிய எழுத்தாளர் (இ. 1955)
1918 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர், பயிற்றுனர் (இ. 2016)
1918 – ரிச்சர்டு பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
1924 – அந்தோனி எவிழ்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர்
1992 – தீபோ கூர்த்துவா, பெல்சியக் காற்பந்தாட்ட வீரர்

இறப்புகள்

1610 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதகுரு, கணிதவியலாளர் (பி. 1552)
1812 – ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1762)
1871 – ஜான் எர்ழ்செல், ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், வேதியியலாளர் (பி. 1792)
1889 – ஜோன் கட்பெரி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1801)
1916 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1873)
1927 – ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1887)
1976 – அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)
1978 – பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1924)
1981 – பாப் மார்லி, சமாய்க்கா பாடகர் (பி. 1945)
2001 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1952)

சிறப்பு நாள்

தேசிய தொழில்நுட்ப நாள் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!