லாபத்தா லேடீஸ்/ஓடிடி திரை அலசல்/-மிருணாளினி நடராஜன்

 லாபத்தா லேடீஸ்/ஓடிடி திரை அலசல்/-மிருணாளினி நடராஜன்

கனவு காண மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை

.Laapataa Ladies -at Netflix

பிரபலமான நடிகர்கள் இல்லை , ஆடம்பரமான விஷயம் எதுவும் இல்லை , ஆனால் படம் முழுவதும் ரசிக்க வைக்கிறது .

கிராமத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள் , திருமணம் , அதை ஒற்றி நடக்கும் சடங்கு , புகுந்த வீடு செல்லுதல் போன்று பல விஷயம் . சில நேரம் , இன்னும் நாட்டில் இப்படி கடை கோடியில் மக்கள் இருக்கிறார்களா என தோன்றுகிறது .

பூமல் குமாரி – இந்த கதாபாத்திரம் எடுத்து நடிக்கும் பெண் 15 -16 வயதே இருப்பாள் …

ஊர்ல சொல்லுவாங்களே … மரப்பாச்சி பொம்மைக்கு சேலை கட்டி இருக்கிற மாதிரி னு … அப்படி இருக்கா … எளிமை , அழகு . எல்லோரும் நல்லவுங்க என்று என்னும் குணம் .

கணவன் பெயர் சொல்ல கூடாது , அவளுக்கு தனது கணவன் வீடு விலாசம் தெரியாது .. அத்தனை வெகுளி . அதில் அவளுக்கு பெருமையோ பெருமை . ஆனால் ஒரு பெண்ணுக்கு தெரிய வேண்டியது சமையல் கலை . வீடு நிர்மாணிப்பது , தையல் கலை எல்லாம் இல்லை , அதை தாண்டி அவளுக்கு பொது அறிவும் , வாழ்க்கையில் யாரையும் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று இல்லாத ஒரு நிலை தான் என்று புரிய வைக்கும் ஒரு வயது முதிர்ந்த டீ கடை நடத்தும் மஞ்சு பாய் கேரக்டர் …

அவள் கணவன் தீபக் – ஒரு சாதாரண கிராமத்து இளைஞன் . புது தாலி கட்டிய மனைவியை பிரிந்த அவனுக்கு அவளிடம் முதன்முதலில் தனது காதலை ஆங்கிலத்தில் சொல்லும் போது அவன் கண்கள் இன்னும் பல பாஷை பேசுகிறது . That is a wonderful frame. The innocence and the pride to show that he is educated … ha. Ha . Love is in the air. அந்த நொடியை நினைத்து பார்த்து அவன் மனைவியை எண்ணி ஏங்குகிறான் . கவலை கொள்கிறான் .

மற்றோரு பெண் ஜெயா – கல்வி எத்தனை அவசியம் , அதற்கு அந்த பெண் எந்த அளவுக்கு முயற்சி எடுக்கிறாள் போன்று காண்பிக்கிறார்கள் .

ஒரு ஆபாச சீன் கிடையாது , பிரம்மாண்ட செட் அமைத்து சண்டை காட்சி கிடையாது , ஹீரோ ஹீரோயின் சும்மா தலை சிலுப்பிட்டு டயலாக் இல்லை , மாடர்ன் உடை அணிந்து ஒரு கதாபாத்திரம் இல்லை , கிராமத்து பாஷை .ஆனால் சொன்ன பாடம் அருமை , படம். அவ்வளவு நேர்த்தி .

கனவு காண மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை… my fav dialogue in the picture .

Watch this on Netflix … Kiran Rao was brilliant in this movie . A feel good movie spreading lot of positivity

-மிருணாளினி நடராஜன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...