10ம் வகுப்பு பொதுத்தேர்வு | அரியலூர் முதலிடம்..!

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு | அரியலூர் முதலிடம்..!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வுமுடிவுகளைhttp://tnresults.nic.in http://dge.tn.gov.in மற்றும் https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8,94,264 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 91.55% சதவீத மாணவர்கள், அதாவது 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,22,591 (94.53%) மாணவியரும், 3,96,152 (88.58%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை விட 0.16% உயர்ந்துள்ளது.

13,510 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 12,491 (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 260 சிறைவாசிகளில் 228 (87.69%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1,364 அரசுப்பள்ளிகள் உட்பட மொத்தம் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள மாவட்டங்கள் :

அரியலூர்                   – 97.31 %
சிவகங்கை               – 97.02 %
ராமநாதபுரம்          – 96.36 %
கன்னியாகுமரி     – 96.24 %
திருச்சி                         – 95.23 %
விருதுநகர்                 – 95.23 %
ஈரோடு                        – 95.08 %
பெரம்பலூர்              – 94.77 %
தூத்துக்குடி               – 94.39 %
விழுப்புரம்                – 94.11 %

இந்த பட்டியலில் வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தை (38வது இடம்) பிடித்துள்ளது. புதுச்சேரியில் 91.28 சதவிகிதம் பேரும், காரைக்காலில் 78.20 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...