பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்குமார் நடிக்கும்  ‘Good Bad Ugly’

 பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்குமார் நடிக்கும்  ‘Good Bad Ugly’

அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’ அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார்.  ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த திரைப்படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே படம் குறித்த அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில்,  நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’ படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி மாலை 6.31 மணியளவில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும், இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...