வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

 வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், புத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து படம் ஜுன் மாதம் வெளியாகும் எனவும், படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ இன்று வெளியாகி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...