Tags :ஆரா அருணா

ம் நானும்

எனக்கு நீ வேண்டாம்!!! அவன் தான் வேண்டும்!!! – 6

உனக்காக மட்டும்- உன்னோடு மட்டும்-  உனக்குள் மட்டும்- கரைந்து விடுவதே-  காதலும் கடமையும் என கண்டு கொண்டவள் நான்!!! உனக்குள் இருக்கும் எனக்கும்கூட-  எனக்கே எனக்கென ஒரு சிற்றிடம் கொடுத்தால்தான்  நம் பேரன்பு பூர்த்தி ஆகும் என்பது புரியாதவனா நீ!!!            பொண்ணுங்க நாலு பேரு சேர்ந்தாலே அங்க புரணியும், வீண் பேச்சு, வெட்டி அரட்டையும் தான் இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட பேசிக்கிட்டு இருக்கிறது எவ்வளவு நகைச்சுவையா இருக்கு […]Read More

கவிதைகள்

என்று தணியும் பெண் சுதந்திர தாகம்?

தகவல் யுகத்தில் தடுமாறி நிற்கும்  பெண் அடிமைகளை!!!  வாருங்கள் இசைப்போம் ஒரு விடுதலை ராகம்!!  அடுப்பூதும் கைகள் அவனி  ஆள்கிறது— வளைகரங்கள் வான் அளக்கிறது— பூட்டி வைக்கப்பட்டவள்   இன்று போட்டி போடுகிறாள்— கல்வி மறுக்கப்பட்டவள்  கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்துகிறாள்—  எல்லாமே உண்மை என்றாலும்– எத்தனை சதம்?? ஒன்று—இரண்டு—மூன்று— மீதப்  பெரும்பான்மையின் நிலை என்ன? அடிமைகள் !! ஆம் பெண்ணே நாம் அடிமைகள் தான்!!!  அடிமைகளாய் வாழ்கிறோம் என்பதே அறியாமல்—  அழகு சிறைகளுக்குள் விரும்பி அமர்ந்திருக்கும் அடிமைகள் நாம்!!  உதாரணங்கள் […]Read More

ம் நானும்

எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!!

எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!! என் எல்லாமே நீ என்று ஆன பிறகு-  என் எல்லாவற்றிற்கும் உன்னைத்தானே தேடமுடியும்-   உனக்கான என் நியாயத் தேடல்கள்  கூட தொல்லைகளாகத்  தெரியும் போது-    நமக்குள் தொலைந்து போகும் நெருக்கம் புரியவில்லையா உனக்கு -!!!!           தப்புதான் மனோ …..அலுவலகத்தில் இருக்கிற உனக்கு அடிக்கடி அலைபேசி அழைப்பு கொடுக்கிறதும்…. குறுஞ்செய்தி அனுப்புறதும்… நீ பதில் அனுப்புற வரைக்கும் அது […]Read More

மனோநலம்

எங்கள் ரத்தத்தின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லையா?

தாய் வயிற்றில் – பனிக்குட நீரில்-  பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை-  பீறிக்கிழிக்கப்பட்டு-  தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து-  தலைகீழாக அடிக்கப்பட்டு – சிந்திச்  சிதறிய அந்த குழந்தை இரத்தம்  குமுறி அழும் குரல் கேட்கவில்லையா?   பாருலகில் பட்டொளி வீசிட – பள்ளிக்கு படிக்க சென்ற  சிட்டுக்குருவிகளாம் சின்னஞ் சிறார்கள்-  ஆலயம் போன்ற ஆரம்ப பள்ளியிலேயே-  அணுகுண்டின் அணுப்பிளவில்  தேகம்பிளந்து கிடக்க-  தேங்கிய இரத்தத்தின் சப்தம் கேட்கவில்லையா?    முலைகள் முகிழ்க்கும் முன்னரே காமுகர்களின் கையில் […]Read More

ம் நானும்

நான் ஒரு பெண்!!!

நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!!  நான் ஒரு பெண்  மாதவம் செய்தல்ல – எப்பிறப்பில் செய்த  மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே – நான் ஒரு பெண்!!  பெண்ணாய் பிறந்த ஒரே ஒரு பெரும் குற்றத்திற்காக,  எனக்கு மட்டுமாய் இந்த சமூகம் எழுப்பிவைத்திருக்கும்  இரும்புச்சங்கிலிகளின் முரட்டுப் பிடியில்   மூச்சு முட்டிப்போய் நிற்கிறேன்!!  அன்றாடமும் அஞ்சி அஞ்சியே அழிந்துவிடுமோ – என  வெஞ்சினம் கொண்டு இதை எழுதுகிறேன்.  ஆம்!! அன்றாடமும்  […]Read More

ம் நானும்

எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!!

எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!! எனக்கு எல்லாம் நீயாக உனக்கு எல்லாம் நானாக நமக்கு எல்லாம் நாமாக நம்மை நாம் உணர்ந்திருந்தால் அடுத்தவரின் வரவும் உறவும் எப்படித் தவறாகும் என்னவனே ! திருமணம் கணவன் குழந்தைகள்னு ஆன பிறகு ஒரு பொண்ணுக்கு நண்பர்கள் இருக்கக் கூடாது. அதுலயும் குறிப்பா ஆண் நண்பர்கள் இருக்கவே கூடாதுன்னு எவன் எழுதி வச்சானோ எல்லாரும் அதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க ?! நீயும் கூட அப்படி இருக்கியே மனோ […]Read More

முக்கிய செய்திகள்

தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்…

தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்…             “நான் செத்து தொலையிறேன்” என்று கோபத்தில் சொன்னால்கூட வாயிலேயே இரண்டு அடி அடித்து, “இது என்ன பேச்சு ?விளையாட்டுக்கு கூட இப்படி பேசி பழக கூடாது!! நல்ல நாளும் அதுவுமா இப்படியா பேசுறது?” என்பன போன்ற திட்டுக்களையும் வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து வாங்கி சுமக்க வேண்டும். இது நம்ம ஊரில். ஆனால் நெதர்லாந்தில்  தேர்வு பயத்தை போக்குவதற்காக  கல்லுரி ஒன்றே கல்லறை […]Read More

தொடர்

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 3 – ஆரா

என்னவென்று கேட்க வேண்டிய நீயே எட்டி நிற்கையில்-  கொட்டிக் கெடக்கும் பணத்தால் என்ன பயன்?  என்னவனே!  ஆயிரங்களல்ல…. தேவை உன் அருகாமைதான் என்பது எப்போது புரியும் உனக்கு !!!           கடந்த சில ஆண்டுகல்ல வாக்குவாதம், சண்ட, முகச்சுளிப்பு இல்லாத ஒரு விசேஷமாவது நம்ம வீட்டுல வந்துருக்கா? எது சொன்னாலும் உடனே உனக்கென்ன தெரியும் ? ன்னு ஒரே கேள்வி கேட்டு என்ன மடக்குற! பரவாயில்ல ஆனா இப்ப நம்ம கொழந்தைங்க கூட […]Read More

தொடர்

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 2

எனக்கு நீ வேண்டாம்!!! அவன்தான் வேண்டும்!!! காயங்களில் கொடியது _ காதலுக்குரியவர் கண்ணெதிரே இருந்தும் கூட _ கண்டு கொள்ளாமல் இருப்பதே. மனோ நேத்து நான் டைரி எழுதிகிட்டு இருக்கும்போதே நீ வந்துட்ட. மளிகை சாமான் லிஸ்ட் எழுதக்கூட சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு மொபைல்ல டைப் பண்ணி எடுத்துட்டு போறேன்னு எத்தன தடவ எங்கிட்ட கோபப்பட்டு இருக்க. அப்படிப்பட்ட நான் சின்சியரா உட்கார்ந்து எழுதிக்கிட்டு இருக்கேன். நீ என்னன்னு கூட கேட்காம போயிட்ட .எனக்கு எவ்வளவு ஏமாற்றமா இருந்துச்சு […]Read More

தொடர்

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!!

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! காதலர்களாய் கல்யாணம் செய்து கொண்டோம்!! தம்பதிகளாய் திருமணபந்தம் கொண்டோம்!!  இன்று திரும்பிப் பார்க்கையில்  அடைந்தது எது? இழந்தது எது?? ஹலோ டியர் மனோ!! நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து டைரி எழுதுவேன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாராவது சொல்லியிருந்தா சத்தியமா நான் நம்பி இருக்கவே மாட்டேன். ஆனா இப்போ எனக்கு இது விட்டா வேற வழி இல்லைன்னு தோணுது. இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. […]Read More