எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 2

 எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 2
எனக்கு நீ வேண்டாம்!!! அவன்தான் வேண்டும்!!!
காயங்களில் கொடியது _
காதலுக்குரியவர் கண்ணெதிரே இருந்தும் கூட _
கண்டு கொள்ளாமல் இருப்பதே.
மனோ நேத்து நான் டைரி எழுதிகிட்டு இருக்கும்போதே நீ வந்துட்ட. மளிகை சாமான் லிஸ்ட் எழுதக்கூட சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு மொபைல்ல டைப் பண்ணி எடுத்துட்டு போறேன்னு எத்தன தடவ எங்கிட்ட கோபப்பட்டு இருக்க. அப்படிப்பட்ட நான் சின்சியரா உட்கார்ந்து எழுதிக்கிட்டு இருக்கேன். நீ என்னன்னு கூட கேட்காம போயிட்ட .எனக்கு எவ்வளவு ஏமாற்றமா இருந்துச்சு தெரியுமா?
நீ கேட்ட உடனே நான் டைரிய தூக்கி கொடுத்திருப்பேனான்னு தெரியாது; என்ன பதில் சொல்லி இருப்பேன்னு  கூட தெரியாது. ஆனா நீ கண்டுக்காம போன ஏமாற்றம் மட்டும் ரொம்ப கொடுமையா இருந்தத உணர முடிஞ்சது.
வெறுக்கப்படுவது, மறக்கப்படுவது இதையெல்லாம் விட கொடுமையானது எது தெரியுமா ? நாம அன்பு செய்றவங்க நம்ம கூடவே இருந்தும் நம்மல கண்டுக்காம இருக்கிறது தான். இந்த ஒரு விஷயத்தில மட்டும் இல்ல. இது மாதிரி சொல்ல நிறைய இருக்கு நீ இல்லாத போது நான் சாப்பிட்டேனா? இல்லையா? என்ன டிரஸ் வாங்குறேன்? தினமும் என்ன? எவ்வளவு செலவு செய்யுறேன்? குழந்தைங்க தேவைகளுக்கு என்ன செய்யுறேன் அப்படின்னு எதையுமே நீ கண்டுக்கிட்டதே இல்ல.
இதுக்கு முன்னாடி கூட ஒரு தடவ இதை பத்தி நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு சண்ட வந்துச்சு.அப்போ  கூட நீ சொன்ன “ஏண்டி! கேட்டா என்ன எல்லாத்துக்கும் கேள்வி கேக்குறீங்க !!!எனக்குன்னு எதையுமே செஞ்சுக்க சுதந்திரம் இல்லையான்னு கேக்குற; கேக்கலைன்னா என்னங்க இப்படி பொறுப்பில்லாம எதையுமே கண்டுக்காம இருக்கீங்கன்னு சொல்லுற, உன் கூடல்லாம் எப்படி மனுஷன் குப்பை கொட்டுறது”ன்னு  நீங்க கத்துனது இன்னமும் ஞாபகத்தில் இருக்கு. அப்பவே பதில் சொல்லனும்னு தான் நினைச்சேன். ஆனா சொல்லுர  மனநிலையில நானும் இல்ல ,கேக்கிற மன நிலையில  நீங்களும் இல்ல. இப்ப சொல்லுறேன்….
கேள்வி கேக்குறதுகும்,அக்கறையா கேக்குறதுக்கும் வித்தியாசம் இல்லையா மனோ? அப்படியே உன்னோட கேள்வி சரியானதா  இருந்தா கூட அத கேக்குறதுக்கு நேரம் காலம் மனநிலை எல்லாம் கொஞ்சம் பார்க்க கூடாதா ?
நான் ஆசைப்பட்டு ஒரு டிரஸ் வாங்கினேன் .வீட்ல இருக்குற உனக்கு எதுக்கு இப்ப இவ்வளவு வெலைல டிரஸ் வாங்கினன்னு கத்தற….. நான் எப்பவோ அனாவசியமா செலவு செய்ய மாட்டேன்னே உனக்கு நல்லாவே தெரியும். தேவை இருக்கப் போய் தானே வாங்கினேன் அத புரிஞ்சுக்க கூடாதா? நீ சொன்னது போல அது அதிக பணம் கொடுத்து வாங்கினதாவே  இருந்தா கூட ஏம்மா  இவ்வளவு பணம் கொடுத்து இப்ப இத வாங்கணுமான்னு  ஒரு கேள்வி கேட்டு இருந்தா …சாரிங்க  சித்தி பொண்ணு கல்யாணத்துக்கு அக்கா தங்கச்சிங்க எல்லாரும் ஒரே மாதிரி போடலாம்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போயி இதை வாங்க வச்சுட்டாங்கன்னு உண்மையை சொல்லி இருப்பேனே. சரிப்பா எல்லா நேரமும் அப்படி இருக்க முடியாதுதான் ஆனா அதுக்குப் பிறகு அதப்பத்தி ஒரு தடவ கூட பேசணும்னு தோணலையே……
சித்தி பொண்ணு கல்யாணத்தன்னிக்கு  நானா வந்து சொன்னப்ப கூட பதிலே சொல்லாம போயிட்டியே …….அதுக்கு பேரு என்ன மனோ??? ஒருவேளை உனக்கும் நியாயமான காரணங்கள் இருந்திருக்கலா… அத எங்கிட்ட ஷேர் பண்ணனும்னு ஏ தோணல??? அந்த இடைவெளியை பத்தி தா உங்ககிட்ட எப்பவும் கேக்குறேன்… நான் நாலு இடத்துக்கு போறவன்னு சொல்லி வாராவாரம் புதுசு புதுசா பெல்ட் சாக்ஸ் ஷூ சட்டை இன்னும் ஏதாவது வாங்கிட்டு வரத்தான செய்யறீங்க !!!என்னைக்காவது நா கேட்டுருக்கேனா? கேட்டா தான் நீங்க பதில் சொல்லி இருப்பிங்களா??? ஆனா அவரு அப்படி இல்ல மனோ!!! 
எனக்கு பிடிச்சதெல்லா நா கேக்காமலேயே புரிஞ்சுகிட்டு வாங்கித் தருவாரு.நானே வேண்டாம்னு சொன்னா கூட நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எல்லாம் உனக்குத்தானேனு அக்கறையா சொல்வான். உன்ன போல வீட்ல இருக்க வீட்ல இருக்கன்னு குத்திக்காட்டி கேள்வி கேக்கமாட்டான். உன்ன ராணி மாதிரி உக்கார வச்சு  நா பாத்துகிறேன்னு சொல்வான் .என்னோட  கோபம் மகிழ்ச்சி மாதிரியான உணர்வுகள் எல்லாத்துக்கும் பின்னாடி இருக்க சரியான காரணத்தை நான் சொல்லாமலேயே புரிஞ்சுப்பான். அதனாலதான் சொல்றேன் நான் …..எனக்கு நீ வேண்டாம்!!!! அவன்தான் வேணும்!!!!
தொடரும்…
பாகம் – 1   –   பாகம் – 2

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...