கன்னித்தீவு மோகினி – அத்தியாயம் 2
கன்னித்தீவு மோகினி
ஒரே பஸ்ஸில் பயணிக்கும் பத்திரிக்கையாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜெயநந்தன் இருவரும் நண்பர்களாகிறார்கள். இனி….
அந்த அறையெங்கும் ஒரே புகைமூட்டம் உறங்கும் ஜெயநந்தனின் ஏதோ ஒன்று ஊர்ந்து வருகிறது மெத்தென்று இதுவரையில் அனுபவித்திராத ஒருவித நறுமனம் அவன் நாசியைத் தீண்டுகிறது. நந்தனின் தூக்கம் கலைய ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை, அப்போது மெல்லிய ஈரமாய் ஏதோ ஒரு வித மென் அழுத்தம் ஓஹோ….ரோஜா இதழை விடவும் மென்மையான உதடுகள் அவன் விழிகளை ஒத்தியெடுக்கிறது நந்தன் இப்போது கண்களைத் திறக்கிறான் அவள் அவள்…. ஆயிரம் தீப்பிழம்புகள் ஒன்றிணைந்ததைப் போன்ற ஒளியுடன் தகதகவென அந்த பெரிய கண்கள் அவனை காதலுடன் பார்க்கின்றன. அவளின் இதழ்கள் எதையோ கண்டுபிடித்துவிடும் ஈர்ப்புடன் அவனின் முரட்டு இதழ்களுடன் கலக்கிறது அந்தச் சுவையை ஆவலுடன் அவன் பகிரும் நேரம் ……….. பீப் பீப் என்று செல்போனின் ஆலாரம் அவனின் தூக்கத்தை கலைத்துவிட்டு இருந்தது.
ச்சே என்ன அழகான கனவு கலைந்துபோக காரணமாய் இருந்த செல்போனை விரோதியைப் போல பார்த்தான் ஜெயநந்தன். வெளியே அதிகாலைப் பணி புலர்ந்தது சுற்றிலும் குளிர்ந்த காற்று சுற்றிலும் கடற்கரை மினுமினுக்கும் மணல்கள் என அந்த இடமே அற்புதமாய் காட்சியளித்தது. ஜெயநந்தன் கடற்கரைக்கு அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தான்.
அய்யா எழுந்திட்டீங்களா ? சூடாக வரகாப்பியும் வெல்லமும் கொண்டு வந்து உபசரித்தாள் அங்கு வேலை பார்க்கும் காசியின் மனைவி செல்லி.
ம்… எனக்கு காலை உணவு மட்டும் போதும் காசி நான் பதினோரு மணிக்குள் ஒரு இடத்திற்குப் போகணும், தோணி கிடைக்குமா ?!
ஏன் கிடைக்காது ? நான் ஏற்பாடு பண்றேன் அய்யா, செல்லி புட்டும் கொண்டைக்கடலை கறிக் குழம்பும் செய்திருக்கு நீங்க சாப்பிட்டு தயாராகுங்க நான் உடனே வந்திடறேன். வேகமாய் சென்றவன் அய்யா எந்ததீவுக்கு போகணுமின்னு சொன்னீங்க ?
கன்னித்திவு
செல்லி தன் கையில் உணவோடு இருந்த பாத்திரங்களைத் தவறவிட்டாள் காசியை ஒருவித பயப்பார்வை பார்த்தாள்.
கன்னித்திவுக்கா ஏன் சாமி நல்லா அம்சமா இருக்கீங்க? கன்னித்திவு சாதாரணமானது இல்லை அங்கே யாரும் போகவே பயப்படுவாங்க? நிறைய அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம் அங்கே நடந்திருக்கு! அது மட்டுமில்ல அங்கே நிறைய மோகினிகள் உலவுவதாகவும் அது கன்னிப்பசங்களை கண்டா விடாது வேண்டாங்கய்யா இங்கே சுத்திப் பார்க்க நிறைய தீவு இருக்கு நான் உங்களை அங்கே கூட்டிப்போறேன்
காசி எனக்கு பேய் பூதம் பிசாசு இதெல்லாம் நம்பிக்கை கிடையாது நான் இப்போ கன்னித்தீவுக்கு போயே ஆகணும். ஆகவேண்டிய ஏற்பாடுகளை கவனி ! மறுத்துபேச இயலாத படி அவன் சொன்னதும் என்னசெய்ய ? என்று தோணிக்குச் சொல்லப்போனான் காசி.
அய்யா என் மாமன் சொல்றதும் சரிதானுங்க நான் சின்னப்பிள்ளையிலே இருந்து இங்கே வளர்ந்துகிட்டு வர்றேன். சுத்திப்பார்க்க வர்றவங்க கூட அந்தப் பக்கம் போக பயப்படுவாங்க, ஒருமுறை உங்களைப்போலவே ஒரு சின்னவயசு ஆளு தணித் தோணி போட்டுகிட்டு அந்த பக்கமா வழி மாறி போயிட்டாரு நாலு நாளாச்சு காணலை, ஒரு நாமதியானம் அவரோட தோணி வந்தது அதிலே அவரு அப்பப்பா செல்லியின் உடல் ஒருமுறை சிலிர்த்து …. வேணாம் அய்யா அந்த தீவு. பரிமாறியபடியே அவள் சொன்னதும் ஜெயநந்தனின் ஆர்வம் அதிகரித்தது. இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். அதிலும் சில நாட்களாகவே அந்த எண்ணம் அவனுக்குத்தான் மேலோங்கி இருந்ததே, அவன் செல்லியின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை, அமைதியாக சாப்பிட்டான். சற்றைக்கெல்லாம் காசி அங்கு வந்து சேர்ந்தான்.
என்ன மாமா ஆச்சு ?
வழக்கம் போலத்தான் யாரும் தோணி தர தயாரா இல்லை நீ அய்யா கிட்டே கொஞ்சம் பதமா எடுத்த சொன்னியா
இந்தகாலத்து பிள்ளைங்க எதைத்தான் கேட்குது ! அவரு வாயே திறக்கலை நீயே போய் சொல்லிடு தோணியில்லைண்ணா அவரு போறது கஷ்டம் தானே நான் மதியத்திற்கு ஏதாவது சமைக்கிறேன் செல்லி நகர்ந்ததும், தோணி கிடைக்காத விஷயத்தை ஜெயநந்தனிடம் சொன்னான் காசி, ஆனா நான் கட்டாயம் போயே ஆகணுமே, என்ன செய்யலாம் நெற்றியைக் கீறி யோசித்தான். கண்களை மூடிக்கொண்டு என்னசெய்வது என்று யோசிக்கும் போதே நீருக்கடியில் தோன்றிய அந்த முகம் இன்னும் எத்தனை நாள் நான் காத்திருக்க வேண்டும் என்று கேட்பதைப் போல இருந்தது. அவன் அவளை முதன் முதலில் பார்த்த நாளை நினைவு கூர்ந்தான்.
ஆனந்த் நீங்க சொல்றது உண்மையா ? நிஜமாவே ஜெயநந்தன் உங்களுக்கு பிரண்டாயிட்டாரா ? நீங்க இரண்டு பேரும் போட்டோ எடுத்து அனுப்பனதைப் பார்த்ததும் என்னால நம்பவே முடியலை
அதெல்லாம் ஆனந்த் நெனைச்சதை சாதிச்சிட்டான். நீதான் ரொம்ப பயங்காட்டினே
எப்படியோ நம்ம திட்டபடி, எல்லாம் நல்ல விதமா முடிஞ்சிடுச்சி …..அவரு இப்போ வர்கலாவுலே ஒரு ரிசார்ட்ல இருக்கார். சரி அவர்தான் லைனில் வர்றார் நான் அப்பறம் பேசறேன் அவசரமாய் செல்லை அணைத்தவன் சொல்லுங்க நந்தன் என்று ஆரம்பித்தான்
தொடரும்…
அத்தியாயம் 1 – அத்தியாயம் 2