எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!!

 எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!!

எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!!

எனக்கு எல்லாம் நீயாக உனக்கு எல்லாம் நானாக நமக்கு எல்லாம் நாமாக நம்மை நாம் உணர்ந்திருந்தால் அடுத்தவரின் வரவும் உறவும் எப்படித் தவறாகும் என்னவனே !

திருமணம் கணவன் குழந்தைகள்னு ஆன பிறகு ஒரு பொண்ணுக்கு நண்பர்கள் இருக்கக் கூடாது. அதுலயும் குறிப்பா ஆண் நண்பர்கள் இருக்கவே கூடாதுன்னு எவன் எழுதி வச்சானோ எல்லாரும் அதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க ?! நீயும் கூட அப்படி இருக்கியே மனோ ! எப்படி ?

நான் சின்னப் புள்ளையா இருக்கிற காலத்துல இருந்தே அந்த நலன் எனக்கு நல்ல நண்பன் தெரியுமா ? அவனுக்கு மூணு வயசு இருக்கும் போது அவங்க குடும்பம் எங்க வீட்டு பக்கத்துல குடி வந்தாங்க. அதுல இருந்து பண்ணிரெண்டாம் வகுப்பு முடிக்கிறவரை நாங்க ஒரே பள்ளிக்கூடம். ஒரே வகுப்பு அடுத்தடுத்த வீடுன்னு எவ்வளவு நல்ல நண்பர்களா இன்னும் சரியா சொல்லணும்னா எங்க வீட்ல அவன் ஒரு ஆளா, அவங்க வீட்ல நான் ஒரு ஆளாதான் வளர்ந்தோம். அவன் மேல்படிப்பு படிக்க அவங்க மாமா உதவி செய்யறேன்னு சொன்னதால அவனும் அவனோட அம்மா அப்பாவும் வேற ஊருக்கு போயிட்டாங்க. பெருசா தொலைதொடர்பு வசதியெல்லாம் இல்லாத சூழல்ல நாங்களும் அவங்களும் அதுக்கப்புறம் பெருசா தொடர்பு இல்லாம போய்ட்டோம். ரொம்ப வருஷத்துக்கு பிறகு இப்பதா ஒரு மாசம் முன்னாடி அவன முகநூல் வழியா கண்டுபிடிச்சேன். இது எல்லாமே உனக்கு தெரியும். நானுங்கூட சின்ன வயசுல நாங்க ரெண்டு குடும்பமும் சேர்ந்து எடுத்துக்கிட்ட புகைப்படம் எல்லா ஊருக்கு போகும் போது காட்டிருக்கே. நீ மறந்துருக்க மாட்டேன்னு நினைக்கிறே. கல்யாணமே வேண்டாம்னு இவ்வளவு படிச்ச பிறகும் தனியாவே இருந்து தன்னால முடிஞ்ச வரைக்கும் சமூகசேவை செய்யற அவனை பாராட்டலைன்னாலும் பரவாயில்லை, ஆனா நீ ரொம்ப அவனை மட்டமா பேசுற, அது தப்புன்னு சொன்னதுக்கு என்னையும் நீ ரொம்ப பேசிட்ட….

வருத்தமா இருக்கு மனோ, அவனோடு சேர்ந்து வேல செய்யுற பையனுக்கு மேல் படிப்புக்கு பணம் கொடுத்து உதவ சொல்லி அவன் ஒரு முகநூல் பதிவு போட்டு இருந்தான். அத பாத்துட்டு நானாதா உங்கிட்ட நாம உதவி செய்யலாமான்னு கேட்டேன் ? அதுக்குள்ள நீ பாட்டுக்கு, அவனே பொழக்கத் தெரியாம சமூக சேவ செய்யிறேன் அப்படியிப்படி ஊரை ஏமாத்திட்டு அலையிறான். அதுல நீ வேறயா…..நம்ம சின்ன வயசு தோழி, புருஷன் நல்லா சம்பாதிக்கிறான். பணத்தை சுருட்டலாம்னு திட்டம் போட்டுருக்கானா அப்படி இப்படின்னு குதிக்கிற. எனக்கு தெரியும் மனோ உனக்கு பிரச்சனை ஒரு பத்தாயிரம் ரூபா பணம் கொடுக்கிறது இல்ல. அத உன்னோட பொண்டாட்டியோட நண்பனுக்கு கொடுக்கிறதுதான்.

அவனை நான் மொத மொதல்ல முகநூல்ல கண்டுபிடிச்சுட்டு உங்கிட்டே வந்து சொல்லும் போதே பெரிய அமெரிக்க ஜனாதிபதி…தொடர்பில் வந்திட்டே மாதிரி குதிக்கிற நீ..அப்படின்னு கேட்டியே அதை நான் இன்னும் மறக்கலை, அதுக்கு அப்பறம் எப்ப நான் அவனப் பத்தி எத சொல்ல வந்தாலும் இப்படித்தான் குதர்க்கமாக பேசுற, உன்னோட இந்த கோபத்துக்கு என்ன காரணம் ? நீ எம்மேல சந்தேகப்படுறன்னு சொல்லி நம்ம் தாம்பத்தியத்தை…உன்னோட அன்பே…..நான் கொறச்சு மதிப்பிட விரும்பலை, ஆனா அதே சமயம் என் மேல இருக்கிற அதிகபட்ச உரிமை உணர்வுன்னு முட்டாள்தனமா விட்டுட்டும் என்னால போக முடியாது.

திருமணத்திற்கு பிறகு நீ இழக்காம நான் மட்டும் இழந்து போன பல நல்லதுல என்னோட நட்பு வட்டமும் ஒண்ணு. எப்பின்னு தெரிஞ்சுக்கணுமின்னா நம்மளோட முகநூல் பக்கத்த போய் பாரு. நண்பர்களோட கடற்கரை திரையரங்கம் தொடர்ந்து பல வருஷமா பதிவுகள் போடுற நீ ! அதுல பல பேரு உன்னோட சின்ன வயசு நண்பர்கள் தான் ! அதில் ஆண்களும் இருக்காங்க பெண்களும் இருக்காங்க ! ஆனா என்னோட அலைபேசியில் கூட என்னோட சின்ன வயசு நண்பர்கள் இல்லைன்னா திருமணத்திற்கு முன்னாடி என்னோட நல்ல நட்பு வட்டத்தில் இருந்த பல பேர் காணாம போயிருக்காங்க ! அதப்பத்தி என்னைக்காவது நான் கவலைப்பட்டு இருக்கேனா ? இல்ல உன்னதான் இவங்க யாரு ? அவங்க யாரு ? அப்படின்னு கேட்டு இவங்க யாரு ? அவங்க யாரு ? அப்படின்னு கேட்டு இவங்க கிட்ட பழகாத ! அவங்ககிட்டே பழகாத!!ன்னு கட்டளை போட்டு இருக்கேனா ? அப்படியிருக்கும் போது என்னோட நட்பு வட்டத்தை மட்டும் ஏன் உன்னால ஏத்துக்க முடியலை ?!

நலனோட அம்மா அப்பாவ அத்தை மாமான்னு சொன்னேன் அதுக்கு அவங்க உனக்கு எப்படி அத்தை மாமான்னு புருவத்த சுழிச்சிட்டு கேக்குறியே ?! பக்கத்து வீட்ல இருக்கவங்கள அத்தை மாமான்னு நம்ம பெத்தவங்க சொல்லிக் கொடுக்கிறதுக்கு காரணம் அவங்க குடும்பத்தோட கல்யாண சம்பந்தம் வைச்சிக்கிறது நல்லது இல்லை… தான் இல்லைன்னாக் கூட ஒரு உதவிக்கு தன்னோட மனைவி தயங்கி நிக்க கூடாதுன்னு, உனக்கு பக்கத்து வீட்டில ஒரு அண்ணன் இருக்கான்னு ஒரு கணவன் ஒரு மனைவிக்கு உருவாக்கித் தர அழகான உறவு வட்டம் அது. இது வட தெரியாத நீ என்ன உலகம் தெரியாதவனு மட்டம் தட்டுற…. ஒன்னா வளந்தோம்னா அதுக்கு அர்த்தமே ஒரு தாய் வயித்துப் பிள்ளைக மாதிரி வளந்தோன்னு தான் அவன நீ கேவலமாக பேசி அதனால அவனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவன் பாதையில அவ முன்னேறிக்கிட்டுதான் இருப்பான். எங்கிட்ட குதர்க்கமாக பேசுறதால எனக்கும் பெரிசா வருத்தம் இலலை. ஏன்னா நா யாரு ? நீ யாரு ? நாம யாரு ? நலன் யாரு ? நலனுக்கு என்ன இடம் கொடுக்கணுமின்னு ? நான் தெளிவா இருக்கேன்…. ஆனா நீதான் மனோ உன்னோட மதிப்ப கொறச்சுக்கிற….பொண்டாட்டிகிட்ட மதிப்போட நடக்கக்கூடாதுன்னு இருக்கா என்ன ???

ஆனா அவன் அப்படியில்லை தெரியுமா ? என்னோட நண்பர்கள அவனோட நண்பர்களா நடத்துவான்…அவனோட நண்பர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி அவங்க சேரும் போதெல்லாம் நானம் இருக்கிற மாதிரி பார்த்துப்பான்….என்ன உறவா இருந்தாலும் அதுல கொஞ்சம் நட்புணர்வு இல்லனா அந்த உறவுக்கு அர்த்தமே இல்லைன்னு எவ்வளவு அழகா சொல்லிக்கொடுத்தான் தெரியுமா ? இன்னைக்கு கூட அவன் உணர்த்தின அந்த அழகான நட்புக்கு ஈடா நான் இந்த உலகத்தில் எதையுமே பார்க்கலை !!! அது ஒரு தனி உணர்வு உங்கிட்ட அது மருந்துக்குக் கூட இல்ல !!அதனாலதான் சொல்றேன் ! எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேணும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...