நா(ன்)ம் பார்க்காத கொடைக்கானல்/
நா(ன்)ம் பார்க்காத கொடைக்கானல்
தினம் தினம் நம் வாழ்வு எதை நோக்கிப் போகிறது என்று தெரியாமலே அதன்பின் நாம் சென்று கொண்டு இருப்போம். எப்போதாவது தான் நாம் நினைத்தபடி சில நாட்கள் அமையும் அப்பேர்பட்ட நாட்களை பற்றி தான் இப்போது நான் எழுத போகிறேன்.
நா(ன்)ம் பார்க்காத கொடைக்கானல்
.
என் குடும்பத்துடன் ஒரு இனிய சுற்றுலா. ஒரு வித்தியாசமான இடம். மறக்க முடியாத பயணம். ஆகவே என் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலை 5 மணி அளவில் வந்தே பாரத் ரயில் வண்டியில் மீண்டும் எனது கொடைக்கானல் பயணம் ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தேநீர் குடித்தோம். ஒரு மணி நேரம் கழித்து
காலை உணவு( சைவம், அசைவம் )வகைகள் முடித்தோம்.
ரயில் தடங்கள் பயணம் செய்த பகுதிகளின் காட்சிகளை கண்டு கொண்டே விழுப்புரம் வந்தடைந்தோம். மீண்டும் ரயிலின் வேகம் 100 கிலோ மீட்டர் தாண்டி திருச்சி அடுத்து திண்டுக்கல் மறுநாள் காலை 10 மணிக் கு வந்து சேர்ந்தோம்
ரயில் நிலையத்தில் பேக்கரி போர் என்ற ஒரு பேக்கரி உள்ளது.அங்கு கேக் மற்றும் குக்கீஸ் இன்னும் நிறைய வகைகள் இருந்தன.அனைத்தும் சுவையாக இருந்தது. அவற்றில் சிலவற்றை வாங்கிக் கொண்டு அங்கேயே தேநீர் குடித்தோம்.
நாங்கள் கொடைக்கானலில் வில்பட்டி என்ற கிராமத்தில் 16 டிகிரி என்ற ரெசார்ட் புக் செய்திருந்தேன். அவர்களே எங்களுக்கும் எனது நண்பர்களின் குடும்பத்தாருக்கும் மினி பஸ் அனுப்பி இருந்தார்கள். அதில் ஏறி மலைகளின் இளவரசி கொடைக்கானல் வந்தடைந்தோம்.இங்கு நான் 16டிகிரி ரெசார்ட் அமைப்பை கண்டு பிரமித்தேன். அங்கு ரூம்கள் தனியாகவும் கீழ்த்தளம் மற்றும் மேல் தளம் கொண்டதாகவும் இருந்தது.அந்த ரெசார்ட்டின் பின்புறம் பெரிய மலைகளும் மரங்களும் நிறைந்து பார்க்க கண் கொள்ளா இயற்கை எழில் கொஞ்சும் வண்ணம் இருந்தது.
அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை மிகவும் நன்கு கவனித்தனர்.நாம் கேட்கும் எதையும் இல்லை என்று சொல்லாமல் அனைத்து சௌகரியங்களும் செய்து கொடுத்தனர். நாங்கள் தங்கி இருந்த மூன்று நாளைக்கு உணவுகளை அங்கேயே சமைத்து பரிமாறினர்கள்.நாங்கள் மொத்தம் 30க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தோம். எங்களது அனைத்து தேவைகளையும் அவர்கள் குறிப்பறிந்து நிறைவேற்றினார்கள்.
முதல் நாள் மாலை ரெசார்ட் இன்சார்ஜ் ஃபன் கேம் விளையாட சதீஷ்குமார் என்பதை நியமனம் செய்திருந்தார். நான் எனது கணவர் அதுபோல எனது தோழிகள் மற்றும் அவரவர் கணவர்கள் மற்றும் அனைவரது பிள்ளைகளும் கலந்து கொண்டோம்.அந்த ஃபன் கேம் பிளே எங்கள் அனைவரையும் 3 மணி நேரம் குறையாமல் நடந்தது. எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தோம்.சிறுவர்களுக்கு என்று தனியாகவும் பெண்களுக்கென்று தனியாக கணவன்மார்களுக்கு என்று தனியாக விளையாட்டுகள்.அதேபோல் இளம் தலைமுறைகளுக்கும் பல விளையாட்டுகள் அந்த மூன்று மணி நேரம் எப்படி போனது என்று எங்களுக்கு தெரியவில்லை.
விளையாட்டு முடிந்ததும் இரவு 7 மணி அளவில் ஃபயர் கேம்ப் ஆரம்பமானது. குளிருக்கு இதமாக அனைவரும் நெருப்பின் அருகில் அமர்ந்து கொண்டு இரவு உணவை உண்டு கொண்டு ப்ளூடூத் ஸ்பீக்கரில் நல்ல இசை கேட்டுக் கொண்டே நாங்கள் மகிழ்ச்சியாக கழித்தோம். சில பாடல்களுக்கு ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமாக இருந்தது.
இரண்டா ம் நாள்
காலை உணவுக் கு பின் எங்களுக்கென நியமித்திருந்த ஜீப்களில் ஏறி அன்றைய காட்சி பயணம் ஆரம்பித்தது. வில்பட்டியிலிருந்து சில கிலோமீட்டர் தாண்டி வந்த பிறகு நாங்கள் பயணித்த ஜீப்கள் நின்றன. எங்கள் அனைவரையும் இறங்கச் சொல்லி சிறு தூரம் நடந்து சென்றோம்..நீர் கொட்டும் சல சல சத்தம் கேட்டது. அருகில் செல்லச் செல்ல அதன் சத்தம் அதிகமானது. நீர் திவலைகளும் நம் மீது பட அருகில் சென்று பார்த்தல் அதுதான் கண்ணை கவரும் பள்ளங்கி அருவி. இல்ல இந்த அருவியை சுற்றிலும் மூங்கில் மரங்களும் யூகலிப்டஸ் மரங்களும் எங்கள் அனைவரையும் கவர்ந்தது. நாங்கள் அங்கே நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.அங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்கு பயணிக்க செல்லும் அந்தப் பாதையில் மற்ற மற்ற வாகனங்கள் பயணிக்க முடியாது அந்த ஜீப்கள் இதற்கு என பிரத்தியேகமானது. ஒரு அழகிய கிராமத்தை வந்தடைந்தோம். அங்கு வாழும் மலைவாசிகளை கண்டோம். அவர்களை கடந்ததும் ஒரு அழகிய நீரோடை கண்டோம். அந்த அந்த ஆழமற்ற நீரோடையிலேயே ஜீப்கள் செல்ல நீரோடையின் மத்தியில் வந்து இறங்கினோம்.அது புதிய அனுபவமாக இருந்தது. குளிக்க அருமை யான இடம் அது. நிறைய பேர் குளித் தனர்.புகைப்படங்கள் எடுக்க அந்த பகுதி மிக அழகு. நெறய படங்கள் எடுத்தோம்.
அடுத்தது ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல அது மலையின் உச்சியாக இருந்தது. அங்கிருந்து பார்த்தால் அனைத்து மலை முகடுகளும் சரிசமமாக தெரிந்தன.அங்கே மூடுபனி நிறைந்திருந்தது..அருகில் இருப்பவர் யார் என்று தெரியாத வண்ணம் பணி ஓட்டியிருந்தது அங்கு கூடாரம் அமைத்து நிறைய பேர் தங்கி இருந்தார்கள். அந்தப் பகுதி ஏதோ நாம் வான வீதியில் உலா வருவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் நம்மை மேகங்கள் கடந்து சென்றன அங்கு ஒரு உயரமான மரத்தில் ஊஞ்சல் ஒன்று கட்டியிருந்தது. அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி பாடி மகிழ்ந்தனர். புகைப்படம் எடுத்துக் கொண் டோம்.
இதுவரை நான் பலமுறை கொடைக்கானல் சென்று இருக்கின்றேன்.எப்போதும் லேக் பார்க் பைண்ட் ஃபாரஸ்ட் பில்லர் ராக் குணா கேவ் போன்ற இடங்களையே திரும்பத் திரும்ப பார்த்து எனக்கு சலித்து போய் இருந்தது.ஆனால் இந்த முறை நான் பார்த்த புதிய இடங்கள் நான் கொடைக்கானலுக்கு தான் வந்திருக்கின்றேனா அல்லது வேறு ஏதாவது மலைப் பிரதேசத்திற்கு வந்திருக்கின்றேனா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.மிகுந்த மன நிறைவை தந்தது மகிழ்ச்சி பொங்கியது.
எனக்குள் என் உடன் வந்தவர்களுக்கும் இதே உணர்வையே தந்து இருக்கும் என்று நம்புகிறேன் அங்கிருந்து கிளம்பி நாங்கள் தங்கியிருந்த 16 டிகிரி ரெசார்டிற்கு திரும்ப வந்து சேர்ந்தோம்.
மூன்றாம் நாள்
வில்பட்டிலிருந்து கிளம்பி பூம்பாறை முருகன் கோவில் சென்றடைந்தோம். அந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் அந்த கோவிலில் வீற்றிருக்கும் சிலை பழனி மலையில் உள்ள நவபாஷாண சிலையை போன்று இதுவும் ஒரு நவபாஷாண சிலை என்றார்கள்.இதை போகர் என்ற சித்தர் நவபாசானத்தால் தயாரித்து பிரதிஷ்டை செய்தாரம்.
இந்த கோவிலின் குழந்தை வேலவனை தரிசித்து விட்டு திரும்பும் வழியில் கொடைக்கானல் அருகில் சாக்லேட் நீலகிரி தைலம் போன்றவற்றை வாங்கிக்கொண்டு ெரசாட்டிற்கு திரும்பினோம்.
நான்காம் நாள்
கொடைக்கானலில் இருந்து கிளம்பி சிறிது நேரத்தில் திண்டுக்கல் வந்து அடைந்தோம். திண்டுக்கல் வந்தவுடன் அனைவருக்கும் அதிக பசி எடுக்க எனது உறவினர் சொல்லியிருந்த உணவகமான சிவா பிரியாணி என்ற ஹோட்டலுக்கு சென்றோம்.. அங்கு மட்டன் சீரக சம்பா பிரியாணி. கோலா உருண்டை மற்றும் பிச்சு போட்ட கோழிக்கறி மிக சிறப்பாக இருந்தது அனைவரும் ஒரு பிடித்தோம். அதன் ருசி நீண்ட நேரம் எங்கள் நாவிலே இருந்தது
நான் பலமுறை கொடைக்கானல் வந்திருக்கின்றேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு புதிய அனுபவத்தை பெறவில்லை. இந்த இடம் என் நினைவில் நீங்கா இடம் பிடித்தது
இந்த சுற்றுலா பயணம் என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நினைவுகளாக என்னை இன்னும் ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது
வணக்கம் வாசகர்களே
இந்த பயண இடங்கள் குறித்தான விவரங்களை உங்களுக்கு இங்கே கொடுத்து இருக்கிறேன்
-திவண்யா பிரபாகரன்
Journey Details :
Dindigul railway station to resort-101 kms
Kodai road railway station to resort -85 kms
Madurai junction to resort- 121 kms
Palani railway station to resort- 71 kms
Unseen Kodai “
Trip details
Regular Route 1
Attuvampatti (starting point)
Pallangi Farms
Gundaaru valley view (Adisarai)
Pallangi Falls
Palani Temple view
Dam view ( palaru porunthalaru)
Shooting Rock
Shade Falls
Plums Falls
Porunthalaru River walk
River side restaurant
To and from distance
36 KMS
Time duration (4 to 5 hours)