என்னை மாற்றிய காதலே
இது காதல் மாதம்
காதல் கவிதை
தலைப்பு
என்னை மாற்றிய காதலே
எந்தன் உயிருக்குள்
உயிராய் கலந்தவனே
காதல் மலர்களை
பூக்கச் செய்தவனே
ஆசைகள் யாவும்
ஆவல் கொள்ளும்
மனதைக் களவாடிய
அன்புக் காதலனே
உந்தன் பாதியாய்
என்னை பாவித்து
எந்தன் பதியாய்
ஆளும் வேந்தனே
நறுமணம் நிறைந்த
மலரும் மயங்குகிறது
இறைகுணம் கொண்ட
உந்தன் அன்பினிலே
இதயத்தில் துடிக்கும்
ஒவ்வொரு துடிப்பிலும்
ஓசையாகிய எந்தன்
நீயே உயிராகிறாயே
மஞ்சுளா யுகேஷ்.துபாய்