எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!!
எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!!
காதலர்களாய் கல்யாணம் செய்து கொண்டோம்!!
தம்பதிகளாய் திருமணபந்தம் கொண்டோம்!!
இன்று திரும்பிப் பார்க்கையில்
அடைந்தது எது? இழந்தது எது??
ஹலோ டியர் மனோ!!
நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து டைரி எழுதுவேன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாராவது சொல்லியிருந்தா சத்தியமா நான் நம்பி இருக்கவே மாட்டேன். ஆனா இப்போ எனக்கு இது விட்டா வேற வழி இல்லைன்னு தோணுது. இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு.
இன்னைக்கி நம்ம வீட்ல நடந்த பார்ட்டில நம்ம வாழ்ந்த வந்தவங்க நிறைய பேரு, “உனக்கு என்னடி அம்மா?! கை நிறைய சம்பாதிக்கிற புருஷன்!! கண்ணுக்கு அழகா ரெண்டு குழந்தைங்க!! வேற என்ன வேணும்?! இப்படியே கடைசி வரைக்கும் நல்லா இரு”ன்னு வாழ்த்திட்டு போனாங்க. அதைப் பற்றி யோசிக்கும் போதுதான் இதை எழுதணும்னு தோணுச்சு.
உங்க கிட்ட எல்லாத்தையும் உடனுக்குடனே மனசு விட்டுப் பேசனும்னு தான் தோணுது. ஆனால் நமக்கு நடுவில அதுக்கான நேரம் ரொம்ப சுருங்கிடுச்சு. இடைவெளி அதிகமாகிடுச்சு. காரணம் கண்டுபிடிக்கணுமே!! அத கண்டுபிடிக்காம இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே நாம ஓட முடியும் ?!
ஏன் மனோ? “உனக்கு என்னடி அம்மா கொஞ்சல்”ன்னு கேக்குறாங்களே!? கல்யாணமான ஒரு பொண்ணுக்கு கணவனோட சம்பளமும் பிள்ளைங்க மேல இருக்கிற பொறுப்பு மட்டும் போதுமா? அதைத் தாண்டி எங்களுக்குன்னு, எனக்குன்னு தேவைகள், ஆசைகள் வேற இல்லையா? காதலிக்கும்போதோ கல்யாணம் ஆன புதுசிலயோ இல்லாத வெறுமை இப்போ ஏன் தோணுது மனோ? இத்தனைக்கும் அன்னிக்கு விட இன்னிக்கு நாம வசதியா இருக்கோம்.
கண்மணி போல குழந்தைங்க இருக்காங்க. ஆனாலும் மனசுல ஏன் இந்த வெறும? அப்போ இருந்தது எது இப்போ என்கிட்ட, நம்ம கிட்ட இல்லன்னு யோசிக்கும் போது கிடச்ச பதில் என்ன தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம கிட்ட இருந்த காதல், கல்யாணத்துக்கு பிறகு நம்ம கிட்ட இருந்து நெருக்கம், ரெண்டுமே இப்போ இல்ல!!! எத நோக்கினு தெரியாமலே எதயோ நோக்கி ஓடிக்கிட்டே இருக்கோம் மனோ!! எனக்கு அலுத்துப் போச்சு!!
உன்னோட டென்ஷன காட்டவும் – உனக்கு தேவையானதை செய்யவும் மட்டும் தான் உனக்கு இப்போ நான் வேணும் – கடைசியா எப்போ நாம மனசு விட்டு சந்தோஷமாக பேசிக்கிட்டோம்? ஞாபகம் இருக்கா? என்னோட டென்ஷன நான் யாரு கிட்ட காட்டமுடியும்? அப்படியே நான் காட்டினாலும் உடனே ஒரு மோசமான அம்மாவாவும் பொறுப்பில்லாத பொண்டாட்டியாவும் தான் என்ன பேசுவாங்க?!
உன்னோட வேலை, அதோட அடுத்த லெவல்னு, உனக்கு ஒரு குறிக்கோள் இருக்கு. நம்ம குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம இருக்கோம். ஆனா நான்???? என்னோட குறிக்கோள்???? நீயும் நம்ம குழந்தைகளும் உங்க உங்க பாதையில் போறீங்க… இதுல நான் எங்க இருக்கேன்!?! எனக்கான பாதைன்னு தனியா எதுவும் இல்லையா?? இல்ல அப்படி எதுவும் இருக்கக் கூடாதா??? இப்படி எனக்குள்ள எவ்வளவோ குழப்பங்கள் அது எல்லாம் சரி பண்ணனும்னு கூட இல்ல…
ஆனா பகிர்ந்துக்க கூட ஏன் எனக்கு நீ இல்ல மனோ?!?! இதுக்கெல்லாம் ஒரே முடிவு தான் மனோ..
எனக்கு நீ வேண்டாம் அவன்தான் வேணும்