சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் குழப்பம்
கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வரவில்லை என்றும், மானிய தொகை குறைவாக வருகிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த புகார்கள் எழுந்துள்ளதாகவும், சர்வர் தொழில் நுட்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் அவரது ஆதார் எண்ணை வெவ்வேறு வங்கியில் கொடுத்தாலும் பிரச்சனை ஏற்படும் என்று கூறியுள்ளது.
மானியம் முறையாக வராத வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான எண்களையும் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சென்னை வாடிக்கையாளர்கள் 044 – 24339236 / 24339246 / 9444970551 ஆகிய எண்களிலும், கோவை வாடிக்கையாளர்கள் 0422 – 2247396 / 8903836950 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வாடிக்கையாளர்கள் 0452 – 2533956 / 8145868184 ஆகிய எண்களிலும், திருச்சி வாடிக்கையாளர்கள் 0431- 2740066 / 9940634670 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!