சென்னையில் பல விமானங்களின் சேவை மொத்தமாக ரத்து..!

 சென்னையில் பல விமானங்களின் சேவை மொத்தமாக ரத்து..!

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்தனர். இதனால் சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் வருகை குறைந்த நிலையில், பல விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்து பருவ மழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்தது. குறிப்பாகத் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்தது.

அடுத்த கட்டமாக இப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களுக்குச் சென்னை உட்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 பருவமழை சீசனை பொறுத்தவரைத் தென்மேற்கு பருவமழை காலத்தில் எப்போதும் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் நல்ல மழை இருக்கும். வடக்கு மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழையின் போது பெரியளவில் மழை இருக்காது. அதேநேரம் வடகிழக்கு பருவமழை சீசனான அக். முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை சீசன். இந்த காலகட்டத்தில் தான் வடமாவட்டங்களில் நல்ல மழை இருக்கும்.

இந்த முறை வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதனால் கடந்த சில நாட்களாகச் சென்னை உட்பட பல மாவட்டங்களில், குறிப்பாக வடக்கு மாவட்டங்களில், நல்ல மழை பெய்திருந்தது. குறிப்பாகச் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கூட விடுக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேபோல பொதுமக்களும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அலர்ட்டாக இருந்தனர்.

இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மழை பெய்த இடங்களிலும் கூட பெரும்பாலும் நீர் தேங்காமல் வடிந்துவிட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரிய மழையைத் தராமல் கரையைக் கடந்த நிலையில், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும், கனமழை பெய்யும் என நினைத்த மக்கள் பலரும் தங்கள் விமான டிக்கெட்களை ரத்து செய்துள்ளனர்.

மழை நின்றுவிட்ட போதிலும் எங்கு மீண்டும் மழை பெய்யுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் பலரும் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர். மேலும், பலர் தங்கள் விமான டிக்கெட்களை ரத்தும் செய்துள்ளனர். இதனால் சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருந்தது. குறிப்பாக, போதிய பயணிகள் இல்லாததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரவிருந்த 8 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டன. மழை இல்லாத நிலையில், நாளை முதல் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...