பிக் பாஸ் 8 | முதல் நாளே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்..!

 பிக் பாஸ் 8 | முதல் நாளே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. இதில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதலில் 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. அதில் ஓபனாக போட்டியாளர்கள் நாமினேஷன் செய்கிறார்கள். யார் வெளியேறி இருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று வான வேடிக்கை, கானா பாடல் மானாட்டம், மயிலாட்டத்துடன் தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமாக இருக்கும் என்று விஜய் டிவி புது ப்ளான் போட்டு இருக்கிறது. அதோடு முதல் நாளே நிகழ்ச்சி பற்றிய பேச்சை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி விட்டனர்.

அதாவது நிகழ்ச்சி தொடங்கி 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். இது எந்த சீசனிலும் இதுவரைக்கும் இல்லாதது. இதை இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ரசிகர்களும் இது பற்றி பேசி வரும் நிலையில் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்று யாரை வெளியேற்றம் செய்யலாம் என்று ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாள் மட்டுமே ஆகியிருக்கிறது. போட்டியாளர்களில் பலர் ஏற்கனவே பழக்கமானவர்களாக இருந்தாலும் நிகழ்ச்சியில் எப்படி விளையாடுவார்கள் என்று தெரியாமலேயே அடுத்தவர்களை அவர்களுடைய முகத்துக்கு நேராகவே நாமினேஷன் செய்ய பிக் பாஸ் வைத்திருக்கிறார். முதல் நாள் தொடங்கிய பிரச்சனை இனி நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று முதல் நாளே பிக்பாஸ் கொளுத்தி போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே இந்த சீசனில் வீட்டிற்குள் ஒரு கோடு போட்டு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். சௌகரியமாக இருக்கும் அறை பெண்களுக்கு வேண்டும் என்றால் ஒரு வாரம் முழுக்க எந்த ஆண்களையும் பெண்கள் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று ஆண்கள் தரப்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்கு தர்ஷனா உட்பட சிலர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் புகைச்சல் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தான் இன்று எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்போடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா முதல் நாளே எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் எதிர்பாராததை எதிர்பார்ப்பார்கள் என்று சொல்லும் பிக்பாஸில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கலாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...