மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்தமாணவர்களின் பட்டியல் வெளியானது..!

 மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்தமாணவர்களின் பட்டியல் வெளியானது..!

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்த  மாணவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை 2024- 25 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் ஜூலை 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்நிலையில், மருத்துவ படிப்பிற்கான தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்த  மாணவர்களின் பட்டியல் பின்வருமாறு.

  • ரஜ்னீஷ் – 720  – வழுதரெட்டி, விழுப்புரம்
  • சையத் ஆரிஃபின் யூசுஃப் – 715 – அண்ணா நகர், சென்னை
  • ஷைலஜா – 715 – கோடம்பாக்கம், சென்னை
  • ஸ்ரீராம் – 715 – கோட்டைமேடு, ராமநாதபுரம்
  • ஜெயதி பூர்வஜா – 715 – திருவண்ணாமலை
  • ரோகித் – 715 – திருச்செங்கோடு, நாமக்கல்
  • சபரீசன் – 715 – பாலப்பட்டி, நாமக்கல்
  • ரோஷினி – 715 – சென்னை
  • விக்னேஷ் – 715 – கருப்பட்டிபாளையம்,நாமக்கல்
  • விஜய்கிருத்திக் சசிகுமார் – 710 – கோவை

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...