குறைந்த நாட்களில் அதிக இதய அறுவை சிகிச்சை | கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் சாதனை..!
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் குறைந்த நாட்களில் அதிக இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் 6 மாதங்களில் 1,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதே போல், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 6 மாதங்களில் 1,000 பேருக்கு ரத்தநாள அடைப்பை சரி செய்யும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இருதயவியல் துறை தொடங்கி ஆறே மாதங்களில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிநவீன வசதிகள் கொண்ட துறையாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இருதயவியல் துறை உள்ளது. இருதயவியல் துறையில் 6 மாதங்களில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்டி, பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இருதயவியல் துறையில் மட்டும் இதுவரை ரூ.40 கோடி மதிப்பிலான சிகிச்சை இலவசமாக தரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.40 கோடி சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.