ஜலந்தர் மேற்கு தொகுதியில் ‘ஆம் ஆத்மி கட்சி’ வெற்றி..!

 ஜலந்தர் மேற்கு தொகுதியில் ‘ஆம் ஆத்மி கட்சி’ வெற்றி..!

பஞ்சாப் இடைத்தேர்தலில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் , தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன.

பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதியை பொறுத்தவரை ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சிரோமனி அகாலி தளம் என நான்கு முனை போட்டி நிலவியது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகாத் முன்னிலை வகித்து வந்தார்.

இந்த நிலையில் மொத்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகாத் 55246  வாக்குகளும், பாஜக வேட்பாளர் சீத்தல் அங்கூரல் 17921 வாக்குகளும்  , காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் கவுர் 16757 வாக்குகளும்  மற்றும் சிரோமனி அகாலி தள வேட்பாளர் சுர்ஜித் கவுர் 1242 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பகாத்  37325 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...