கார்த்தியின் ‘சர்தார் 2’ இன்று பூஜையுடன் தொடங்கியது..!

 கார்த்தியின் ‘சர்தார் 2’ இன்று பூஜையுடன் தொடங்கியது..!

 ‘சர்தார் 2’ திரைப்படத்தின் பணிகள் இன்று (ஜுலை 12) பூஜையுடன் தொடங்கியது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’.  தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார்.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில்,  ‘சர்தார் 2’ திரைப்படத்தின் பணிகள் இன்று (ஜுலை 12) பூஜையுடன் துவங்கி உள்ளது.

இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன்,  ரத்ன குமார், நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சர்தார் 2’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  ‘சர்தார் 2’ படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு, இதன் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...