நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.  இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால்,  நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில்,  வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வகையில், சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,  வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன்,  2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் ஏப்.18 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பாண்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.  ஏப்.16 மற்றும் 17 ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முன்பதிவில் காலியாக உள்ள இருக்கைகளின் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து புறப்படும் பேருந்துகளின் முன்பதிவு விவரம்

ஏப்.16 இல் (மொத்த இருக்கைகள்30,630) 1,022 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  29,608 இருக்கைகைகள் காலியாக உள்ளன.  ஏப்.17 இல்,  (மொத்த இருக்கைகள் (31,308)  6,475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 24,833 இருக்கைகைகள் காலியாக உள்ளன.

எனவே,  ஏப்.18 அன்று கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஏப்.16 மற்றும் 17 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...