ரேஷன் பொருள்கள் வாங்குவதில் இனி சிக்கல் இல்லை..!
ரேஷன் கடைகளில் வேலை செய்யும் சிலர் அங்குள்ள பொருட்களை ஏமாற்றி விற்று விடுகின்றனர் என்ற பல புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதனை தடுக்கும் பொருட்டு உணவு வழங்கல் துறை டிஎன்இபிடிஎஸ் என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.
சாமானிய மக்கள் பலர் தங்களுக்கு மாதம் மாதம் தேவையான பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரியம் ஊழியர்கள் சிலர் பொருட்களை தந்திரமாக காசுக்கு மற்றவர்களிடம் விற்று விடுகின்றனர் என்ற புகார்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி அனைத்து அட்டைதாரர்களும் மலிவான விலையில் விலையிலும், இலவசமாகவும் சர்க்கரை, அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் மகளிர் உதவி தொகை, பொங்கல் பரிசு போன்ற சிறப்பு நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன.
ஆனால் ரேஷன் கடைகளில் இருக்கும் ஊழியர்கள் சிலர், பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன. அது என்னவென்றால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் சில குடும்பங்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் கடை சாமான்களை வாங்காமல் இருக்கும் பட்சத்தில், அந்தப் பொருள் ரேஷன் கடைகளில் மீந்து விடுகிறது. இதனை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றவர்களுக்கு அல்லது மளிகை கடை வைத்திருக்கும் நபர்களுக்கு அதிக காசுக்கு விற்று விடுகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் யாரேனும் சாமான்கள் வாங்காமல் இருந்தால் அவர்களுக்கு அந்த பொருட்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவுத்துறை பலமுறை ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கும்படி சொல்லியும், அதனை சில ஊழியர்கள் சரிவர பின்பற்றவில்லை, அதற்கு காரணங்களாக கடையில் பொருட்கள் இல்லை என்றும், மெஷின் வேலை செய்யவில்லை என்றும் சிலவற்றை சொல்லி அட்டைதாரர்களை அனுப்பி வைக்கின்றனர். எனவே, இவற்றை தடுக்க தமிழக உணவு வழங்கல் துறை டிஎன்இபிடிஎஸ் என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அப்ளிகேஷனை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது மொபைல் போன்களில் டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, ரேஷன் கார்டு அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்த அட்டைதாரர்களுக்கு ஒதுக்கி வைத்த ரேஷன் கடை பொருட்களின் இருப்பு, அதற்கு போன மாதம் வாங்கிய சாமான்கள் போன்ற விவரங்களை அறிய முடியும். இதனால் நீங்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தே அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த முடிவானது சில முறைகேடுகளை தவிர்ப்பதற்காக உணவு வழங்கல் துறையால் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் எடை மிகவும் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனை தடுக்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில மாநிலங்களில் வெவ்வேறு வகையான செயல்முறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் EWS என்று சொல்லப்படும் மின் எடை கருவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் நபர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் அளவை பார்க்க முடியும்.