வந்தாச்சு ஸ்மார்ட் ஹெல்மெட்..!

 வந்தாச்சு ஸ்மார்ட் ஹெல்மெட்..!

தற்போது இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சாதனங்களுக்குத் தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட் ஹெல்மெட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது மிகவும் பிரபலமான ஏத்தர் நிறுவனம் சமீபத்தில் ஏத்தர் ரிஸ்டா எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் உடன் ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் ஆனது ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் (Ather Halo smart helmet) என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த ஹாலோ ஹெல்மெட் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் அம்சங்கள் (Ather Halo Smart Helmet specifications): ஆட்டோ வியர் டிடெக்ட் (auto-WearDetect) தொழிலநுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ஹெல்மெட். இந்த தொழல்நுட்பம் ஹெல்மெட் சரியாக போடப்பட்டுள்ளதா, இல்லையா என்பதைக் கண்காணித்து எச்சரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஹெல்மெட் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏதர் நிறுவனம்.

ஹார்மோன் கார்டன் நிறுவனத்தின் ஸ்பீக்கர்கள் (Harman Kardon speakers) இந்த ஹெல்மெட் சாதனத்தில் உள்ளது. இதன் மூலம் போன் பேசமுடியும். பின்பு பாட்டு கூட கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹார்மோன் கார்டன் ஸ்பீகர்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேசமயம் வெளியில் உள்ள ஹாரன் சத்தமும் இந்த ஹெல்மெட்டில் தெளிவாகக் கேட்கும். சுருக்கமாக இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் உடன் பாதுகாப்பான பயணம் செய்ய முடியும்.

ஏதர் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட் இந்த ஹெல்மெட் மாடலை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். மேலும் இந்த ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் உள்ளே மியூசிக் மற்றும் கால்கள் போன்றவற்றை ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்கிரீன் மூலம் எளிமையாக கண்ட்ரோல் செய்ய முடியும் நிறுவனம் கூறியுள்ளது.

ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலில் உள்ள புளூடூத் வழியாக தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களையும் கனெக்ட் செய்ய முடியும். அதேபோல் Ather ChitChat என்று தொழில்நுட்ப வசதியும் கொண்டுள்ளது இந்த ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட். இந்த தொழில்நுட்பம் மூலம் ரைடரும் பின்பக்கம் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள முடியும்.

அதேசமயம் இந்த ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலில் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த அதிநவீன ஹெல்மெட்டை கழட்டி ஸ்கூட்டர் உள்ளே வைத்தால் தானாக சார்ஜ் ஏறிவிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஐஎஸ்ஐ மற்றும் டிஓடி தரச்சான்று பெற்றுள்ளது இந்த ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் மாடல். குறிப்பாக பல தொழில்நுட்ப அம்சங்கள் இந்த ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலில் உள்ளதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும்.

ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் ஆனது ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலை ரூ.4,999 விலையில் வாங்க முடியும். விரைவில் ஏத்தர் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலை வாங்க முடியும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது ஏதர் நிறுவனம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...