பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

 பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வில் சுமார் 9 லட்சத்திருக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்நிலையில், 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9:30 மணியளவில் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறியதாவது : 

ஏப்ரல் 2024ம் ஆண்டு நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.inhttp://www.dge.tn.gov.in,  https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...