வரலாற்றில் இன்று ( 09.05.2024)

 வரலாற்றில் இன்று ( 09.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 9 கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது..
1386 – இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது.
1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார்.
1612 – கண்டி மன்னர் செனரத்துடன் மார்செலசு டி பொசோடர் தலைமையிலான இடச்சுத் தூதுக்குழு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.[1]
1671 – அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1877 – உருமேனியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
1877 – 8.8 அளவு நிலநடுக்கம் பெருவைத் தாக்கியதில், 2,541 பேர் உயிரிழந்தனர்.
1901 – ஆத்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்ணில் திறந்துவைக்கப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் துறைமுகத்தை பிரித்தானியா இரண்டாம் முறையாக முடக்க எடுத்த நடவடிக்கையை செருமனி தடுத்தது.
1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பயன்பாடு மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.[2]
1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.
1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
1936 – அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எத்தியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாட்டை இத்தாலி உருவாகியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை செருமனியின் யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் அரச கடற்படை தாக்கிக் கைப்பற்றியது.
1942 – பெரும் இன அழிப்பு: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர். பெலருசில் இருந்த நாட்சி வதைமுகாம் அழிக்கப்பட்டு, அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இறுதி செர்மன் சரணடைவு பெர்லினில் சோவியத் தலைமையகத்தில் இடம்பெற்றது. சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் நிலை கொண்டிருந்த செருமனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
1955 – பனிப்போர்: மேற்கு செருமனி நேட்டோவில் இணைந்தது.
1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக சப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
1969 – கார்லோசு லமார்க்கா பிரேசில் இராணுவ ஆட்சியாளருக்கு எதிராகக் கரந்தடித் தாக்குதல்கலை ஆரம்பித்தார். சாவோ பாவுலோவில் இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன.
1977 – ஆம்ஸ்டர்டம் நகரில் போலன் உணவகம் தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.
1979 – பாரசீக யூத தொழிலதிபர் அபீப் எல்கானியான் தெகுரானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானிய யூதர்கள் அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.
1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1987 – போலந்து, வார்சாவா நகரில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 183 பேரும் உயிரிழந்தனர்.
1992 – நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் சூசா நகரைக் கைப்பற்றின.
1992 – கனடா, நோவா ஸ்கோசியாவில் வெசுட்ரே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2001 – கானாவில் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றில் ஏற்பட்ட சலசலப்பை அடக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.
2002 – பெத்லகேமில் பலத்தீனியர்களின் பிறப்பிடத் தேவாலயத்தின் 38-நாள் முற்றுகை முடிவுக்கு வந்தது.
2012 – இந்தோனேசியாவில் மேற்கு சாவகப் பகுதியில் விமானம் ஒன்று சலாக் மலையில் மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர்.
2018 – மலேசியப் பொதுத் தேர்தல், 2018: மலேசியாவின் தேசிய முன்னணி கட்சி 1957 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாகப் பெரும் தோல்வியடைந்தது.

பிறப்புகள்

1408 – அன்னமாச்சாரியார், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503)
1540 – மகாராணா பிரதாப், உதய்பூர் இராச்சிய அரசர் (இ. 1597)
1828 – அன்ட்ரூ மறீ, தென்னாப்பிரிக்க எழுத்தாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1917)
1836 – பெர்டினாண்ட் மோனயர், பிரான்சிய கண் மருத்துவர் (இ. 1912)
1837 – ஆடம் ஓப்பெல், ஓபெல் நிறுவனத்தை நிறுவிய செருமானியப் பொறியியலாளர் (இ. 1895)
1866 – கோபால கிருஷ்ண கோகலே, இந்தியப் பொருளியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1915)
1874 – ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேயத் தொல்லியலாளர் (இ. 1939)
1921 – சோபி சோல், செருமானிய செயற்பாட்டாளர் (இ. 1943)
1944 – சாரல்நாடன், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2014)
1954 – மல்லிகா சாராபாய், இந்திய சமூக ஆர்வலர்
1955 – டி. ராஜேந்தர், தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசைக் கலைஞர், அரசியல்வாதி
1961 – ஜோன் கோர்பெட், அமெரிக்க நடிகர்
1988 – சேசன் பெரியசாமி, மொரிசியசு தமிழிசைக் கலைஞர்
1992 – சாய் பல்லவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1805 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1759)
1931 – ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1852)
1941 – தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (பி. 1883)
1970 – உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1888)
1976 – ஆதி நாகப்பன், மலேசிய எழுத்தாளர், ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1926)
1986 – டென்சிங் நோர்கே, நேப்பால மலையேறி (பி. 1914)
2014 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (குயெர்ன்சி, யேர்சி)
ஐரோப்பா நாள் (ஐரோப்பிய ஒன்றியம்)
வெற்றி நாள் (சோவியத் ஒன்றியம், அசர்பைஜான், பெலருஸ், பொசுனியா எர்செகோவினா, சியார்சியா, இசுரேல், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, உருசியா, செர்பியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உக்ரைன், உசுபெக்கிசுத்தான், ஆர்மீனியா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...