நாடு முழுக்க முடிவிற்கு வந்தது வெப்ப அலை.!

 நாடு முழுக்க முடிவிற்கு வந்தது வெப்ப அலை.!

கேரளா மற்றும் ராஜஸ்தான் தவிர நாடு முழுவதும் வெப்ப அலை நிலை முடிவுக்கு வர உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெப்ப அலை முடிவுக்கு வரவுள்ளது. மேற்கு ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் மட்டும் வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை), மேற்கு ராஜஸ்தானில் மட்டுமே வெப்பம் இருக்கும். இதன் தாக்கம் குறித்து எங்களுக்கு அதிக நம்பிக்கை இல்லாததால் மஞ்சள் எச்சரிக்கையுடன் அனுப்பியுள்ளோம் என ஐஎம்டி நிர்வாகி சோமா சென் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் அதிகபட்ச வெப்பநிலை 43-46 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்கும், பார்மரில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து கங்காநகர் (45.2 டிகிரி C), ஜெய்சால்மர் (45.2 டிகிரி C) மற்றும் ஜோத்பூர் (45 டிகிரி C), இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்ட அதன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பரத்பூர் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை ஏற்கனவே 44 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

வங்காள விரிகுடாவில் இருந்து வலுவான ஈரப்பதம் நாட்டிற்குள் வந்ததால் நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் செயல்பாடு அதிகரிக்கும் என்றும் IMD கூறியுள்ளது. இந்த இடியுடன் கூடிய மழையில் மேகத்திலிருந்து தரையில் மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மின்னல் தாக்குதல்கள் அதிகம் நடக்கலாம்.

கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் நிலவிய கடுமையான வெப்ப அலை முடிவிற்கு வருகிறது. இனி ஞாயிற்றுக்கிழமை வரை தென் மாநிலங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யலாம்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் IMD அறிவிக்கவில்லை. தென் மாநிலங்களில் சுமார் 2-3 டிகிரி C குறையும். வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா முழுவதிலும் உள்ள 27 பெரிய நகரங்கள் “வெப்ப அலையை” கடந்த ஒன்றரை மாதங்களாக அனுபவித்துள்ள. இங்கே பெரும்பாலும் வெப்பம் 41 டிகிரி செல்சியஸைத் தாண்டி நிலவியது.

தற்போது அது முடிவிற்கு வந்துள்ளது. கேரளா மற்றும் ராஜஸ்தான் தவிர நாடு முழுவதும் வெப்ப அலை நிலை முடிவுக்கு வர உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மேக மூட்டமான் வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், 10.05 2024 முதல் 12.05.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.

10.05.2024: தமிழக உள் மாவட்டங்களில் சரி இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
11.05.2024 மற்றும் 12.05.2024 வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உரிய இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். ஆனால் வெப்ப அலை ஏற்படாது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...